பிலிப்பைன்சில் கடலில் மூழ்கிக்கொண்டிருக்கும் கிராமம்

பிலிப்பைன்சில் நாட்டின் தலைநகர் மணிலாவில் இருந்து 17 கி.மீ. தொலைவில் உள்ளது சிடியோ பரிஹான் கிராமம். புவி வெப்பமயமாதலால் கடல்நீர் மட்டம் அதிகரித்து வருவதால் சிடியோ பரிஹான் கிராமம் மெல்ல மெல்ல கடலில் மூழ்கி வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும் சுமார் 4 சென்டிமீட்டர் அளவிற்கு இந்த கிராமம் கடலில் மூழ்கி கொண்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கிராம மக்கள் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியவர்கள் என்பதால் வேறு எங்கும் செல்ல முடியாமல் அங்கேயே வசித்து வருகின்றனர். கடல் நீர்மட்டம் அதிகரிக்க அதிகரிக்க மக்கள் மூங்கில்களை கொண்டு வீட்டின் உயரத்தை உயர்த்தி வருகின்றனர்.

Related Stories: