இவர்கள் ‘மாற்றும்’ திறனாளிகள்... இன்று (டிச.3) சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்

பரபரப்பான சாலையில் வாகனங்கள் பறக்கின்றன. அப்போது பார்வையற்ற அல்லது கால் ஊனமுற்ற ஒரு மாற்றுத்திறனாளி சாலையை கடக்க முயல்கிறார். சிலரது உதவியோடு அவர்கள் சாலையை கடக்கின்றனர். ஆனாலும், பிறரது உதவியை ஏற்காமல், தன்னம்பிக்கையோடு செயல்பட்டு சாதித்துக் காட்டுவார்கள். இதற்காகத்தான் அவர்களை மாற்றுத்திறனாளிகள் என்கிறோம். எதையும் மாற்றும் திறன் படைத்தவர்கள் என்பதுதான் அதற்கு பொருள். அவர்களை மதிக்க வேண்டும். முன்னேற்றப்பாதையில் அவர்கள் செல்ல நாம் பக்கபலமாக இருக்க வேண்டும் என்பதற்காகவே, 1982ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 3ம் தேதியை ஐ.நா சபை சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினமாக அறிவித்தது. மாற்றுத்திறனாளிகளை மேம்படுத்துதல், சமவாய்ப்பு வழங்குதல் என்பதைத்தான் இந்த தினம் இந்த உலகத்திற்கு தெரிவிக்கிறது. உலக மக்கள் தொகையில் சுமார் 10 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் மாற்றுத்திறனாளிகளாக உள்ளனர். சுமார் 70 கோடி பேர் மாற்றுத்திறனாளிகளாக உள்ளனர். இவர்களில் 80 சதவீதம் பேர் ஆசியாவை சேர்ந்தவர்கள். இவர்களில் 80 சதவீதம் பேர் ஆசியக் கண்டத்தை சேர்ந்தவர்கள்.

இந்தியாவில் மாற்றுத்திறனாளிகளின் கல்விநிலை மிகவும் மோசமாக உள்ளது. இவர்கள் படிப்பதற்கான சூழலை அரசு முறையாக ஏற்படுத்தி தர வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்குக் கல்வி நிலையங்களில் முறையான கழிப்பிட வசதிகள் இல்லை. தமிழகத்தை பொறுத்தவரை சுமார் 40 சதவீத மாற்றுத்திறனாளிகள் கல்வியறிவு இல்லாமல் உள்ளனர். இந்திய அளவில் சுமார் 40 சதவீதம் பேர் கல்வி கற்காதவர்களாக உள்ளன. கல்வியறிவு பெற்றவர்களில் பெரும்பான்மையானோர் நடுத்தர பள்ளி வரை மட்டுமே கல்வி பயல்கின்றனர். மேலும், தமிழகத்தில் பார்வையற்றவர்கள் மற்றும் காது கேளாதோருக்கான பள்ளிகள் மிகக்குறைவு. கிராமப்புறங்களில் உள்ள மாற்றுத்திறனாளிகளின் பெற்றோர், அவர்களை பாரமாக பார்க்கின்றனர். தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு கற்பிக்கும் சிறப்புப்பள்ளிகளை அதிகப்படுத்த வேண்டும்.

மேலும், தமிழகத்தில் கல்வியறிவு பெற்ற மாற்றுத்திறனாளிகளின் திறன்களை வளர்க்கவும், சுயதொழில் தொடங்கவும் பயிற்சி அளிப்பதற்கான வலுவான கூட்டமைப்பு தேவை. அதன்மூலம் வருமானத்தை பெருக்கி அவர்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்ற முடியும். ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் 40 சதவிகிதம் ஊனம் இருந்தாலே, மாற்றுத்திறனாளிக்கான சான்று அளிக்கப்பட்டு, நிதியுதவி சலுகை வழங்கப்படுகிறது. தமிழகத்தில் 60 சதவிகிதம் தொடங்கி அதற்கும் அதிகமான ஊனம் இருந்தால் மட்டுமே, மாற்றுத்திறனாளி அங்கீகாரம் வழங்கப்பட்டு நல உதவி பெறும் நிலை உள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். அவர்களுக்கான நிதியுதவி தொகையை அதிகரிக்க வேண்டும். உட்கார்ந்து பணியாற்றும் வேலைகளில் அவர்களை அதிகம் ஈடுபடுத்தலாம்.

மாற்றுத்திறனாளிகளில் சாதனையாளர்கள் பலர் உள்ளனர். உதாரணத்திற்காக ஒருவரை எடுத்துக் கொள்வோம். ஸ்டீபன் வில்லியம் ஹாக்கிங், இங்கிலாந்து நாட்டை சேர்ந்த இவருக்கு 21 வயது இருக்கும்போது, நரம்பு நோயால் பாதிக்கப்பட்டார். இதனால் இவரது உடல் பாகங்கள் அனைத்தும் செயலிழந்தன. பேச முடியவில்லை. மருத்துவர்கள் 3 ஆண்டுகளில் உயிரிழந்து விடுவார் என்றனர். இருப்பினும் தனது மூளையின் உத்தரவுகளை கம்ப்யூட்டரில் பதிவேற்றம் செய்தார். அவரது அண்டம் பெருவெடிப்பு, கருந்துளை பற்றி ஆய்வுகள் பாராட்டை பெற்றன. உலகின் தலைசிறந்த கோட்பாடு இயற்பியலாளர் இவராக கூறுகின்றனர். சக்கர நாற்காலியில் இருந்து கொண்டே அறிவியல் சக்கரத்தை சுழற்றி சாதித்தவர். அதனால்தான் அவர்களை மாற்றுத்திறனாளிகள் என அழைக்கின்றனர். மனம் தளராதீர்கள் மாற்றுத்திறனாளிகளே... வாழ்க்கையில் நீங்கள் சாதிக்க வேண்டிய கடமைகள் ஏராளமான இருக்கின்றன.

Related Stories:

>