பாகிஸ்தானில் மாணவர் சங்கங்கள் மீட்டெடுக்கப்படும்: பிரதமர் இம்ரான் கான் உறுதி

பாகிஸ்தான்: நடைமுறைப்படுத்தக்கூடிய சட்டங்கள் மூலம் மாணவர் அமைப்புகள் மீட்டெடுக்கப்படும் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மாணவர்களுக்கு உறுதியளித்துள்ளார். கட்டண உயர்வு, பல்கலைக்கழகங்களில் துன்புறுத்தல், கைது ஆகியவற்றுக்கு இடையே பாகிஸ்தான் மாணவர்கள் தரமான கல்வியும் நியாயமான கல்விச் சூழலும் வேண்டும் என்று கூறி நவம்பர் 29 ஆம் தேதி நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தப் போராட்டத்தில் முக்கியக் கோரிக்கையாக மாணவர் சங்கங்களை ஏற்படுத்துவதில் உள்ள தடைகளை நீக்க வேண்டும் என்பது மாணவர்களின் பிரதான கோரிக்கையாக இருந்தது. இந்நிலையில் நடைமுறைப்படுத்தக்கூடிய சட்டங்கள் மூலம் மாணவர் சங்கங்கள் மீட்டெடுக்கப்படும் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் உறுதியளித்துள்ளார்.

இதுகுறித்து இம்ரான் கான் கூறுகையில், எங்கள் அரசு நடைமுறைப்படுத்தக்கூடிய சட்டத்தின் மூலம் மாணவர் அமைப்புகள் மீட்டெடுக்கப்படும் என்று கூறினார். சர்வதேச அளவில் உள்ள புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் உள்ள சிறந்த நடைமுறைககளில் ஒரு விரிவான மற்றும் நடைமுறைப்படுத்தக்கூடிய சட்டங்கள் மூலம் மாணவர் அமைப்புகள் மீட்டெடுக்கப்படும் என்று உறுதி அளிக்கிறேன். இதன் மூலம் நாட்டின் எதிர்காலத் தலைவர்களாக இளைஞர்களை வளர்ப்பதில் நமது பங்கை ஆற்றவும் முடியும் என்று தெரிவித்துள்ளார்.

Related Stories: