மாற்றுத்திறனாளிகள் தினம் பொருளாதார, சமூக ரீதியாக ஏற்றம் பெற்றிட முதல்வர் வாழ்த்து

சென்னை: பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும் வாழ்வில் ஏற்றம் பெற்றிட வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: டிசம்பர் மாதம் 3ம் தேதி அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளில் அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் எனது நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.  இந்தியாவிலேயே முதன் முறையாக சென்னையில் மாநில ஆதார வள மையம் நிறுவியது, போக்குவரத்து நெரிசல்மிக்க இடங்களில் பார்வை குறைபாடு உடையவர்கள் பாதுகாப்பாக சாலையினை கடப்பதற்கு ஏதுவாக சென்னையில் 150 இடங்களில் போக்குவரத்து சாலை சந்திப்புகளில் குரல் ஒலிப்பான் சமிக்ஞைகள் நிறுவியது போன்ற பல்வேறு நலத் திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.

இந்த இனிய நாளில், மாற்றுத்திறனாளிகள் பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும் சுதந்திரமாக வாழ்வதற்கு, தமிழக அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு திட்டங்களை மாற்றுத் திறனாளிகள் அனைவரும் சிறந்த முறையில் பயன்படுத்தி வாழ்வில் ஏற்றம் பெற்றிட வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : Veteran's Day ,Chief Minister ,Boom , Disability Days, Economically ,socially, Chief Minister , boom
× RELATED மதுரை பொறியாளருக்கு முதல்வர் வாழ்த்து