கும்மிடிப்பூண்டி அருகே சாலையில் கிடந்த ரூபாய் நோட்டு துண்டுகள்: வடமாநிலத்தவர் வீசினார்களா?

சென்னை: கும்மிடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டை, தச்சூர் பகுதியில் சாலையோரம் ‘மூட்டையில் துண்டு, துண்டாக வெட்டப்பட்ட 10 மற்றும் 20 ரூபாய் நோட்டு கிடந்தது. அதை வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் வீசி சென்றார்களா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். கும்மிடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டை அருகே தச்சூர் பகுதி தேசிய நெடுஞ் சாலையோரம் ேகட்பாரற்று பிளாஸ்டிக் பையில் கட்டப்பட்ட மூட்டை நேற்று கிடந்தது. அதை அப்பகுதியினர் சந்தேகப்பட்டு பிரித்து பார்த்தனர். அதில்,  10 மற்றும் 20 ரூபாய் நோட்டுகளை துண்டு, துண்டாக வெட்டி வைத்திருந்ததை பார்த்த அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.  இதுகுறித்து கவரப்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மூட்டையை முழுமையாக பிரித்து பார்த்தனர். அப்போது 10 மற்றும் 20 ரூபாய் நோட்டுகளை இயந்திரத்தின் மூலம் துண்டு துண்டாக வெட்டி மூட்டையில் கட்டி வீசப்பட்டது தெரியவந்தது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், போலீசார் வழக்கு பதிந்து ரூபாய் நோட்டுகளை துண்டு துண்டாக வெட்டி வீசியது யார்?   இந்த ரூபாய் நோட்டுகள் செல்லத்தக்கவையா அல்லது கள்ளநோட்டுகளா என்பது குறித்தும், அந்த மூட்டையை யார் வீசி சென்றனர். உள்ளூர் ஆட்களா, அல்லது தேசிய நெடுஞ்சாலை வழியே வடமாநிலத்தில் இருந்து வந்து இங்கு வீசி சென்றவர்களா என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags : Northlander ,road ,Kummidipoondi , Kummidipoondi, Rupee slices ,lying
× RELATED சிதம்பரம் நகரில் புதிதாக போடப்பட்ட சாலை பழுதாகும் அவலம்