சில்லி பாயின்ட்...

* ஆஸ்திரேலிய மண்ணில் விளையாடிய 14 டெஸ்ட் போட்டிகளில் பாகிஸ்தான் அணி தொடர்ச்சியாக தோல்வியைத் தழுவியுள்ளதுடன், தொடர்ந்து 5வது முறையாக ‘ஒயிட்வாஷ்’ செய்யப்பட்டுள்ளது.

* தெற்காசிய விளையாட்டு போட்டியில் மாலத்தீவுகள் அணிக்கு எதிராக நடந்த டி20 போட்டியில் நேபாள வீராங்கனை அஞ்சலி சந்த் 13 பந்தில் ஒரு ரன் கூட விட்டுக்கொடுக்காமல் 6 விக்கெட் வீழ்த்தி உலக சாதனை படைத்துள்ளார்.

* கொல்கத்தாவில் டிச. 19ம் தேதி நடைபெற உள்ள ஐபிஎல் ஏலத்துக்கான பட்டியலில் மொத்தம் 971 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர் ( 713 இந்திய வீரர்கள், 258 வெளிநாட்டு வீரர்கள்).

* குவாங்ஸூவில் வரும் 11ம் தேதி தொடங்க உள்ள பிடபுள்யுஎப் உலக டூர் பைனல்ஸ் பேட்மின்டன் தொடரில் விளையாட இந்தியா சார்பில் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து மட்டுமே தகுதி பெற்றுள்ளார். உலக டூர் தரவரிசையில் சிந்து 15வது இடம் பெற்றிருந்தாலும், உலக சாம்பியன் பட்டம் வென்றவர் என்பதால் இந்த தொடருக்கு தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

* இங்கிலாந்து அணிக்கு எதிராக 2016ம் ஆண்டு மும்பையில் நடந்த டெஸ்டில்  கேப்டன் கோஹ்லி 235 ரன் விளாசினார். அந்த போட்டியில் களத்தில் இருந்தபோது வெறும் வாழைப்பழம், தண்ணீரை மட்டுமே வைத்து சமாளித்ததாகவும், இரட்டை சதம் அடித்த அன்று இரவு சிக்கன் பர்கர், பிரெஞ்ச் பிரைஸ், சாக்லேட் ஷேக் சாப்பிட்டு கொண்டாடியதாகவும் அவர் நினைவுகூர்ந்துள்ளார்.

Related Stories: