×

தமிழக ஊரக அமைப்புகளுக்கான உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு: அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை

சென்னை: உள்ளாட்சித் தேர்தலையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. புதிய திட்டங்கள் மற்றும் நிதி ஒதுக்கீடு குறித்த அறிவிப்புகளை வெளியிடக்கூடாது எனவும் கூறப்பட்டுள்ளது. உள்ளாட்சித் தேர்தலில்  எம்எல்ஏக்கள் தொகுதி மேம்பாட்டு நிதியை பயன்படுத்தக் கூடாது என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், தமிழ்நாட்டில் ஊரக அமைப்புகளுக்கான உள்ளாட்சி தேர்தல் டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறும் என்று மாநில தலைமை தேர்தல் ஆணையர் பழனிசாமி அறிவித்தார். தேர்தலுக்கான  வேட்புமனு தாக்கல் வரும் 6ம் தேதி தொடங்குகிறது. மனுக்களை தாக்கல் செய்ய இறுதி நாள் டிசம்பர் 13ம் தேதியாகும். வாக்கு எண்ணிகை ஜனவரி 2ம் தேதி நடைபெறவுள்ளது. மேலும், நிர்வாக காரணங்களுக்காக நகர்ப்புற  உள்ளாட்சிகளுக்கான தேர்தல் தற்போது அறிவிக்கப்படவில்லை என்றும் விளக்கம் அளித்தார். அதேபோல, புதிததாக பிரிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் பழைய மாற்று வரையறையின்படியே தேர்தல் நடைபெறும் என்றும் அவர் கூறியுள்ளார்.

மாவட்ட ஊராட்சி தலைவர், பஞ்சாயத்து தலைவர் உள்ளிட்ட 13,362 பதவி இடங்களுக்கான மறைமுக தேர்தல் ஜனவரி 11ம் தேதியன்று நடைபெறும் என்றும் தெரிவித்தார். மாவட்ட ஊராட்சி தலைவர், துணை தலைவர் மற்றும் ஊராட்சி  ஒன்றிய தலைவர் மற்றும் துணை தலைவர் பதவியிடங்களுக்கு மறைமுக தேர்தல் நடைபெறுகிறது. கிராம ஊராட்சி துணை தலைவர் பதவியிடமும் மறைமுகமாகவே தேர்ந்தெடுக்கப்படும். இதற்கான தேடுதல் ஜனவரி 11ம் தேதி நடைபெறும்  என்று மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி தெரிவித்துள்ளார். தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிட்டுள்ள நிலையில், தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. மேலும், தேர்தல் நடத்தை விதிமுறைகள் ஊரகப் பகுதிகளுக்கு மட்டுமே  பொருந்தும் என்றும் நகர்ப்புறப் பகுதிகளுக்கு பொருந்தாது என மாநில தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.

இந்நிலையில், உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் ஆலோசனையில் திமுக பொருளாளர் துரைமுருகன்,  அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, திமுக எம்.பி.கனிமொழி, கே.என்.நேரு உள்ளிட்ட திமுக மூத்த நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.

உள்ளாட்சி தேர்தல் தேதி குறித்து ஸ்டாலின் அறிக்கை:

உள்ளாட்சி தேர்தல் தேர்தல் அறிவிப்பு குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை, பொங்கலுக்கு ஒன்றரை மாதம் முன்பே ரூ.1,000 விநியோகித்து அதிகாரத்தை தவறாக பயன்படுத்தினாலும் திமுகவுக்கே வெற்றி என  குறிப்பிட்டுள்ளார். மேலும், பஞ்சாயத்து ராஜ் சட்டப்படி செயல்பட முடியாத மாநில தேர்தல் ஆணையர் தமிழ்நாட்டுக்கு தேவையா? என்ற கேள்வி எழுந்துள்ளது. அதிமுகவுடன் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் ஐக்கியப்படுத்திக் கொண்டு  தரம் தாழ்ந்து தகுதி இழந்திருக்கிறது என தெரிவித்துள்ளார். மாநில தேர்தல் ஆணையர் தன் நிலை மறந்து பஞ்சாயத்துராஜ் சட்டத்தை காலில் போட்டு மித்திருப்பது கண்டனத்திற்குரியது என தெரிவித்துள்ளார்.

நிர்வாக அலங்கோலத்தின் மொத்த உருவமாக ஊரக உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதாக ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். அரசும், மாநில தேர்தல் ஆணையமும் சதி செய்து உள்ளாட்சி தேர்தலில் குளறுபடி செய்துள்ளதாக  ஸ்டாலின் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். பிரிக்கப்பட்ட மாவட்டங்களில் வார்டு மறுவரையறை செய்யவில்லை எனவும், பட்டியலின பழங்குடியின மற்றும் பெண்களுக்கு இடஒதுக்கீடு இல்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.

Tags : Election ,Tamil Nadu Rural Organizations , Local Election Date for Tamil Nadu Rural Organizations Announced: MK Stalin Advice
× RELATED நகர்புறங்களில் வசிக்கும் மக்கள்...