சஹாராவில் பனி!

நன்றி குங்குமம் முத்தாரம்

நம்மால் கற்பனை செய்ய முடியாத அளவிற்கு இயற்கை பெரு மாற்றங்களை பூமியில் நிகழ்த்திக் கொண்டிருக்கிறது. பனிப்பிரதேசங்கள் வெப்பத்தில் காணாமல் போய் பாலைவனமாவது ஒரு பக்கம் இருக்க, இன்னொரு பக்கம் பாலைவனத்தில் பனிப்பொழிவு அரங்கேறுகிறது. கடந்த நாற்பது வருடங்களில் மூன்று முறை சஹாரா பாலைவனத்தில் பனிப்பொழிவு நிகழ்ந்திருக்கிறது. ஜனவரி 2018-இல் சஹாரா ஆர்க்டிக் போல காட்சியளித்தது.

பனி போர்த்தியிருக்கும் சஹாராவின் புகைப்படங்கள் வைரலாகின. இத்தனைக்கும் உலகின் அதிக வெப்பமான பகுதி சஹாராதான். இந்த வருடம் சஹாராவில் பனிப்பொழிவு இருக்கும் என்று அதிர்ச்சியளிக்கின்றனர் விஞ்ஞானிகள். பருவநிலை மாற்றம் என்னென்ன மாற்றங்களைக் கொண்டு வரப்போகிறதோ!

Related Stories:

>