உலகின் மிகச்சிறிய மூன் ரோவர்!

இன்னும் இரண்டு வருடங்களில் நிலவில் பெரும் அற்புதம் நிகழப்போகிறது. ஆம்; உலகின் மிகச்சிறிய மூன் ரோவரை நிலவுக்கு அனுப்புகிறது இங்கிலாந்தின் விண்வெளித்துறை. பத்து நாட்கள் நிலவில் தங்கி ஆராயப்போகும் இந்தக் குட்டி ரோபோவின் எடை வெறும் 1.5 கிலோதான். நிலவின் தட்பவெப்ப நிலையைத் தாங்கும் அளவுக்கு இதை வடிவமைத்திருக்கின்றனர்.

இங்கிலாந்து நிலவுக்கு அனுப்பும் முதல் ரோவரும் இதுதான். இதற்கு முன் அமெரிக்கா, ரஷ்யா, சீனா மட்டுமே நிலவிற்கு ரோவரை அனுப்பியிருக்கின்றன. இந்த சாகச நிகழ்வுக்கான கலந்துரையாடல் லண்டனில் அரங்கேறியது.

இந்த ரோவருக்கு சக்கரங்கள் கிடையாது. மனிதன் போன்ற ஒரு உணர்வையும் தோற்றத்தையும் தர வேண்டும் என்பதற்காக சக்கரங்களுக்குப் பதிலாக கால்களைப் பொருத்தியுள்ளனர். ரோவரில் இருக்கும் இரண்டு கேமராக்கள் எடுக்கப்போகும் படங்கள்தான் 2021ல் அரங்கேறப்போகும் விண்வெளி சாகசங்களின் ஹைலைட்டாக இருக்கப் போகிறது.                  

த.சக்திவேல்


Tags : World , Robot, Space, Rover, Moon
× RELATED உலகின் மிகப்பெரிய மலர்