×

நாஸ்கா கோடுகள் என அழைக்கப்படும் 140 புதிய நிலவடிவமைப்புகள் கண்டுபிடிப்பு

நாஸ்கா கோடுகள் என அழைக்கப்படும் 140க்கும் மேற்பட்ட புதிய நிலவடிவமைப்புகளை (geoglyphs) விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.நீண்ட காலத்திற்கு முன்பான, மர்மமான, பண்டைய மாபெரும் உருவங்களின் தொகுப்பான இவை, தெற்கு பெருவின் பாலைவன நிலப்பரப்பில் பொறிக்கப்பட்டுள்ளன. மனிதர்கள், விலங்குகள் மற்றும் இதர பொருள்களின் இந்த பெரிய, பரந்த வடிவமைப்புகளில் சில 2,500 ஆண்டுகளுக்கு முந்தையவை மற்றும் அவை மிகப் பெரியவை. எவ்வளவு பெரியவை என்றால், அவற்றில் பலவற்றை வானிலிருந்து மட்டுமே அடையாளம் காண முடியும்.   

இப்போது ஜப்பானின் யமகடா பல்கலைக்கழகத்தின் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால் 2004 ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்ட ஒரு நீண்டகால ஆராய்ச்சியின் விளைவாக, இதுவரை அறியப்படாத 143 நாஸ்கா ஜியோகிளிஃப்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றில் செதுக்கப்பட்ட உருவத்துடன் கூடிய ஒன்று, மனிதர்கள் மூலம் கண்டறியப்படுவது தவிர்த்து செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் கண்டுபிடிக்கப்பட்டது.

மொத்தத்தில் புதிதாக அடையாளம் காணப்பட்ட ஜியோகிளிஃப்கள் குறைந்தது கிமு 100 முதல் கிபி 300 வரை உருவாக்கப்பட்டதாக கருதப்படுகிறது. பண்டைய நாஸ்கா கலாச்சாரத்தில் வரையப்பட்ட இந்த பெரிய வடிவங்களின் நோக்கம் விவாதிக்கப்படுகின்ற அதே வேளையில், அவை எவ்வாறு கட்டப்பட்டன என்பது தற்போது தெரியவந்துள்ளது.   

இந்த வடிவமைப்புகள் அனைத்தும் அவை சார்ந்துள்ள நிலத்தில் உள்ள கருங்கற்களை அகற்றுவதன் மூலம் கீழே உள்ள வெள்ளை நிலத்தை வெளிப்படுத்துவதன் மூலம் உருவாக்கப்பட்டுள்ளன என்று ஆராய்ச்சி குழு விளக்குகிறது.Tags : NASA , NASA, Lines, Scientists, Landscapes, Innovation
× RELATED ஒட்டன்சத்திரம் அருகே 14ம் நூற்றாண்டு காலத்து கல்வெட்டு கண்டுபிடிப்பு