முதல் கட்டமாக 8 இடங்களில் மேம்பாட்டு பணி ராமர் வனவாசம் சென்ற வழிகளில் சுற்றுலா தலம்: சட்டீஸ்கர் அரசு முடிவு

ராய்ப்பூர்; அயோத்தியில் இருந்து ராமர் வனவாசமாக சென்ற வழித்தடங்களை சுற்றுலா தலமாக்க சட்டீஸ்கர் அரசு முடிவு ெசய்துள்ளது.  ராமர் அயோத்தியில் இருந்து 14 ஆண்டுகள் வனவாசம் மேற்கொண்டார். அவ்வாறு சென்றபோது  75 இடங்கள் வழியாக வனத்தை அடைந்ததாகவும், வழியில் 51 இடங்களில் அவர் தங்கி சென்றதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சட்டீஸ்கர் வனப் பகுதியில் 8 வழிகளில் அவர் சென்றதாக கூறப்படுகிறது, இந்த இடங்களை சுற்றுலா தலமாக்க இம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.  இது தொடர்பாக சட்டீஸ்கர் மாநில அமைச்சரவை கூட்டம் முதல்வர் பூபேஸ் பாகல் தலைமையில் நடந்தது. இதில், எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மாநில செய்தி தொடர்பாளர் கூறியதாவது:

 ராமர் வனவாசம் சென்ற வழித்தடத்தில் 8 இடங்களில் முதல் கட்டமாக மேம்பாட்டு பணிகள் நடத்தப்பட்டு சுற்றுலா தலங்களாக மாற்றப்படும். இந்த 8 இடங்களை எளிதாக அடையும் வகையில் சாலைகள் அமைத்தல், ஒளிரும் பலகைகள் அமைத்தல், சுற்றுலா வசதி மையம் அமைத்தல், வேத கிராமம் உருவாக்குதல், குடிநீர் வசதி, கழிவறைகள், உணவகங்கள் அமைத்தல், மின்வசதிகள் ஏற்படுத்துவது குறித்து ஆய்வு ெசய்யப்படும். இந்த திட்டத்திற்காக மாநில அரசு விரைவில் நிதி ஒதுக்கீடு செய்யவும், மத்திய சுற்றுலா அமைச்சகத்திடம் இருந்து நிதியுதவி கோரவும் முடிவு செய்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories: