இந்துக்களுக்கு எதிரான பேச்சு: கமல் மீது நடவடிக்கை கோரிய வழக்கு டெல்லி நீதிமன்றம் டிச.9க்கு ஒத்திவைப்பு

புதுடெல்லி: இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து தான் என பேசிய விவகாரத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொடரப்பட்ட வழக்கை டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் டிசம்பர் 9ம் தேதிக்கு நேற்று ஒத்திவைத்தது.   தமிழகத்தில் அரவக்குறிச்சி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்ட மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளரை ஆதரித்து பள்ளப்பட்டி பகுதியில் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. இஸ்லாம் மக்கள் அதிகம் வசிக்கும் இடம் என்பதால் இப்படி பேசவில்லை. காந்தியின் சிலைக்கு முன்பு நின்று கொண்டு இதை சொல்கிறேன். நாட்டில் சமரசம் தலைத்தோங்கி இருக்க வேண்டும் என பேசினார்.

இது மிகப்பெரும் சர்ச்சையாக எழுந்தது.   இந்த நிலையில் கமல்ஹாசனின் மேற்கண்ட பேச்சுக்கு எதிராக இந்து சேனா அமைப்பின் தலைவர் விஷ்னு குப்தா என்பவர் டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், “இந்து மக்கள் மற்றும் மதங்களை வேதனைப்படுத்தும் விதமாக பிரசாரம் மேற்கொண்ட மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்தல் ஆதாயத்திற்காக அவர் பேசியுள்ளதை கண்டிப்பாக ஏற்க முடியாது என குறிப்பிடப்பட்டது. இந்த நிலையில் மேற்கண்ட வழக்கு டெல்லி பாட்டியாலா நீதிமன்ற நீதிபதி சுமித் ஆனந்த் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்த போது வழக்கை டிசம்பர் 9ம் தேதிக்கு ஒத்திவைத்து  உத்தரவிட்டார்.

Related Stories: