×

விளையாட்டு துளிகள்

* கேப்டனாக டெஸ்ட் போட்டிகளில் மிக விரைவாக 5000 ரன் மைல்கல்லை எட்டிய பெருமை விராத் கோஹ்லிக்கு சொந்தமானது (86 இன்னிங்ஸ்). அவர் நேற்று 32 ரன் எடுத்தபோது இந்த சாதனையை நிகழ்த்தினார். ஆஸி. அணியின் பான்டிங் (97 இன்னிங்ஸ்), வெஸ்ட் இண்டீசின் கிளைவ் லாயிட் (106), தென் ஆப்ரிக்காவின் கிரேம் ஸ்மித் (110), ஆலன் பார்டன் (ஆஸி., 116), ஸ்டீபன் பிளெமிங் (நியூசி., 130 இன்னிங்ஸ்) ஆகியோர் அடுத்த இடங்களில் உள்ளனர்.
* டெஸ்ட் போட்டிகளில் 100 விக்கெட் வீழ்ச்சியில் பங்களித்த 5வது இந்திய விக்கெட் கீப்பர் என்ற சாதனையை விருத்திமான் சாஹா வசப்படுத்தி உள்ளார். உமேஷ் பந்துவீச்சில் ஷத்மன் இஸ்லாம் கொடுத்த கேட்ச்சை அபாரமாகப் பிடித்த சாஹா இந்த மைல்கல்லை எட்டினார். டோனி (294), கிர்மானி, கிரண் மோர், மோங்கியா ஆகியோருக்கு அடுத்த இடம் அவருக்கு கிடைத்துள்ளது.
* இந்திய வேகம் இஷாந்த் டெஸ்ட் போட்டிகளில் 12 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு சொந்த மண்ணில் 5 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.
* ஒரே டெஸ்ட் போட்டியில் ‘மூளை அதிர்ச்சி’ காரணமாக 2 பேட்ஸ்மேன்களுக்கு மாற்று வீரரை களமிறக்கிய முதல் அணியாக வங்கதேசம் பதிவாகி உள்ளது.
* இந்திய குதிரையேற்ற வீராங்கனை பவாத் மிர்சா 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான தகுதியை உறுதி செய்துள்ளார். இதன் மூலமாக 20 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு இந்தியா ஒலிம்பிக் குதிரையேற்றத்தில் பங்கேற்க உள்ளது.
* சீனாவில் நடைபெற்ற ஐஎஸ்எஸ்எப் உலக கோப்பை துப்பாக்கிசுடுதல் பைனல்ஸ் தொடரின் 2 பிரெசிடன்ட் கோப்பைகளையும் இந்திய அணி கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.
* பாகிஸ்தான் அணியில் அறிமுகமாகி உள்ள 16 வயது இளம் வேகப்பந்துவீச்சாளர் நசீம் ஷாவின் உண்மையான வயது குறித்து சர்ச்சை கிளம்பி உள்ளது. பாக். செய்தியாளர் ஒருவர் கடந்த ஆண்டே நசீம் ஷாவை 17 வயது வீரர் என தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.



Tags : Virat Kohli , Virat Kohli
× RELATED நரேந்திர மோடி மைதானத்தில்...