×

மேட்டூர் அணையில் தண்ணீர் திறப்பு குறைப்பு

மேட்டூர்: கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்துள்ளதால், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து குறைந்து வருகிறது. தொடர்ந்து 3 நாட்களாக விநாடிக்கு 8,143 கனஅடியாக இருந்த நிலையில், நேற்று காலை நிலவரப்படி 7,510 கனஅடியாக நீர்வரத்து சரிந்துள்ளது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு விநாடிக்கு 7 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டு வந்தது. இது நேற்று காலை முதல் 6 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டது. மேலும் கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 700 கனஅடியாக திறக்கப்பட்டுள்ளது. அணையின் நீர்மட்டம் 120 அடியாக நீடிக்கிறது. நீர் இருப்பு 93.47 டிஎம்சியாக உள்ளது. அதேவேளையில், ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து தொடர்ந்து 7 ஆயிரம் கனஅடியாக நீடிக்கிறது. அங்கு பரிசல் சவாரிக்கு அனுமதி அளித்துள்ள போதிலும், சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிப்பதற்கு விதிக்கப்பட்டுள்ள தடை நீடிக்கிறது.

Tags : water opening ,Mettur Dam Mettur Dam , Mettur Dam
× RELATED தமிழ்நாட்டுக்கு 22,800 காவிரி நீர்...