×

அரசு ஆஸ்பத்திரியில் நர்சின் அலட்சியம் பெண்ணுக்கு ஊசி போட்டதில் பாதி உடைந்து உடலில் புகுந்தது

சீர்காழி: நாகை மாவட்டம் சீர்காழி ஈசான்ய தெருவை சேர்ந்தவர் குமார். இவரது மனைவி பார்வதி(55). இவருக்கு கடந்த 9ம் தேதி காய்ச்சல் ஏற்பட்டது. சிகிச்சைக்காக அதே தெருவில் உள்ள அரசுஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சென்றார். அங்குள்ள நர்ஸ், பார்வதியின் இடுப்பு பகுதியில் ஊசி போட்டார். அந்த ஊசி ஒடிந்து பாதி உடலுக்குள்ளேயே இருந்து விட்டது. இதை நர்சும், பார்வதியும் கவனிக்கவில்லை. ஊசி போட்ட இடத்தில் மறுநாள் வலி அதிகமானது. சரியாகி விடும் என நினைத்து பார்வதி ஒத்தடம் கொடுத்து உள்ளார். ஆனால் வலி மேலும் அதிகரித்து அந்த இடம் வீங்கி நடக்க முடியாமல் போனது.

இதையடுத்து உறவினர்கள் பார்வதியை சீர்காழி தலைமை மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். அங்கு எக்ஸ்ரே எடுத்து பார்த்தபோது பார்வதியின் இடுப்பில் ஊசி இருப்பது தெரியவந்தது. இதனை இங்கு அகற்ற முடியாது. சிதம்பரம் மருத்துவ கல்லூரிக்கு சென்று ஆபரேசன் செய்ய வேண்டும் என பரிந்துரை செய்துள்ளனர். தகவல் அறிந்து பார்வதி வீட்டிற்கு சென்ற திருவெண்காடு வட்டார மருத்துவகுழுவினர் அவரை, திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர். 2 நாளில் அறுவை சிகிச்சை மூலம் ஊசி அகற்றப்படும் என தெரிகிறது.

Tags : nurse ,government hospital , Government Hospital
× RELATED பாளையங்கோட்டை சிறைக் கைதி தப்பி ஓட்டம்