சர்வாதிகாரப் போக்கை தொடரும் அமைச்சர்களுக்கு திமுக தக்க பாடம் கற்பிக்கும்: மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை

சென்னை: சர்வாதிகாரப் போக்கை தொடரும் அமைச்சர்களுக்கு திமுக தக்க பாடம் கற்பிக்கும் எனக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் டிவிட்டரில் எச்சரித்துள்ளார். திமுக தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், தனது முகநூல் பக்கத்தில் நேற்று வெளியிட்டுள்ள செய்தியில், ‘வேலூரில் சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமாரை, ஆளும்கட்சி மிரட்டியதுபோல், கோவையில் அரசு நிகழ்ச்சிக்கு சென்ற சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார். எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களுக்கே இந்தக் கதி எனில் அப்பாவி மக்களின் நிலை?. சர்வாதிகாரப் போக்கை தொடரும் அமைச்சர்களுக்கு திமுக தக்க பாடம் கற்பிக்கும்!’ எனக்கூறப்பட்டுள்ளது.

Related Stories: