×

முன்னாள் பிரதமர்கள், குடும்பத்தினருக்கு எஸ்பிஜி பாதுகாப்பை விலக்கி கொள்ளும் மசோதாவை தாக்கல் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல்

புதுடெல்லி: முன்னாள் பிரதமர்கள், குடும்பத்தினருக்கு இனி எஸ்பிஜி என்ற சிறப்பு பாதுகாப்பை விலக்கி கொள்ளும் மசோதாவை தாக்கல் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி படுகொலையைத் தொடர்ந்து, அவரது குடும்பத்தினர்களான காங்கிரஸ் தலைவர்கள் சோனியா, ராகுல், பிரியங்கா காந்திக்கு கடந்த 18 ஆண்டுகளாக எஸ்பிஜி எனப்படும் சிறப்பு படை பாதுகாப்பு வழங்கப்பட்டது. அவர்களுக்கு தற்போது நேரடியாக எந்த தீவிரவாத அச்சுறுத்தலும் இல்லாததால் எஸ்பிஜி பாதுகாப்பு ரத்து செய்யப்படுவதாக சமீபத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது.

இதற்கு காங்கிரசின் பல்வேறு தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் எஸ்பிஜி சட்டத்தில் திருத்தம் ஒன்றை கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்தது. நடப்பு நாடாளுமன்ற கூட்டத் தொடரில் இந்த திருத்தம் அறிமுகப்படுத்தட முடிவு செய்யப்பட்டது. இதனையடுத்து முன்னாள் பிரதமர்கள், குடும்பத்தினருக்கு இனி எஸ்.பி.ஜி. என்ற சிறப்பு பாதுகாப்பை விலக்கி கொள்ளும் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த சட்டதிருத்தத்தின் மூலம் இனி பிரதமருக்கு மட்டுமே எஸ்பிஜி என்ற சிறப்பு பாதுகாப்பு வழங்கப்படும் என்று தெரிகிறது.

Tags : Prime Ministers ,Union Cabinet ,withdrawal ,families ,SPG ,SPG Security , Former Prime Minister, SPG Security, Special Security, Union Cabinet
× RELATED Ready to lay my life