'மனுதாரருக்கு தூக்குத் தண்டனை வழங்கி இருக்க வேண்டும்'.. பாலியல் வழக்கில் விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனைக்கு எதிரான வழக்கில் நீதிபதிகள் காட்டம்

மதுரை: மனநலம் குன்றிய பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஈஸ்வரன் என்பவருக்கு விதிக்கப்பட்ட இரட்டை ஆயுள் தண்டனைக்கு எதிரான மனுவை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்துள்ளது.

வழக்கின் பின்னணி

2012ல் நாகை மாவட்டம் கீழ்வேளூரில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பலாத்காரம் செய்து கொலை செய்ததாக ஈஸ்வரன் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த கீழமை நீதிமன்றம், ஈஸ்வரனுக்கு ஆயுள் தணடனையை விதித்து 2015ல் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் ஈஸ்வரன் மேல்முறையீடு செய்திருந்தார்.

இரட்டை ஆயுள் தண்டனைக்கு எதிரான மனு தள்ளுபடி

இம்மேல்முறையீட்டு மனுவை விசாரித்து நீதிமன்றம், காந்தியின் கருத்துப்படி பெண்கள் சுதந்திரத்தை அனுபவிக்கின்றனரா என்பது மில்லியன் டாலர் கேள்வி, பாலியல் குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை, அபராதம் விதிக்காவிடில் நீதி கிடையாது, வழக்கில் சாட்சிகள் இல்லாமல் சந்தர்ப்ப சாட்சியங்களின் அடிப்படையில் மனுதாரர் தண்டிக்கப்பட்டுள்ளார், இந்த வழக்கில் மனுதாரருக்கு தூக்குத் தண்டனை வழங்கி இருக்க வேண்டும் என்று கூறி, தஞ்சை கூடுதல் அமர்வு நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து, மனுதாரருக்கு கீழமை நீதிமன்றம் வழங்கிய ஆயுள் தண்டனையை உறுதி செய்தது.

Related Stories: