×

2 குழந்தைகளின் தாயான ஆசிரியை யாருக்கு சொந்தம்? 2 கள்ளக்காதலர்கள் மோதல்; உருட்டுக்கட்டை அடி, அரிவாள் வெட்டு

அரியலூர்: திருமணமான ஆசிரியையின் கள்ளகாதலன் யார் என்பதில் ஏற்பட்ட மோதலில் வாலிபர் உள்பட 2 பேருக்கு சரமாரி வெட்டு விழுந்தது. இதுதொடர்பாக, ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டார். அரியலூர் மாவட்டம் திருமழபாடி மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் நடராஜன். இவரது மகன் ராஜராஜன் (28). திருமணமாகாதவர். இவர் அப்பகுதியில் ஹார்டுவேர்ஸ் கடை வைத்துள்ளார். இவர் அரசு தொடக்கப்பள்ளியில் பணியாற்றும் தனது தாயார் பாரதியை தினம் பள்ளிக்கு அழைத்து சென்று வருவார். அப்போது, அப்பள்ளியில் பணியாற்றும் திருமணமான ஒரு ஆசிரியைக்கும் ராஜராஜனுக்கும் தொடர்பு ஏற்பட்டது. இவர்கள் இரண்டு பேரும் நெருங்கி பழகி வந்தனர்.

இந்நிலையில் அந்த ஆசிரியைக்கும் பாளையப்பாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியர் ஹென்றி (40) என்பவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. ஆசிரியை இரண்டு பேருடனும் நெருங்கி பழகி வந்தார். இது நீண்ட நாட்களுக்குப்பிறகே ராஜராஜனுக்கு தெரியவந்தது. இதில் ஆத்திரமடைந்த ராஜராஜன், ‘‘திருமழப்பாடி ஆசிரியை என் ஆள், நீ அவளிடம் பேச்சுவார்த்தை வைத்துக்கொள்ளாதே’’ என எச்சரித்தார். அதற்கு, ‘‘நாங்கள் இரண்டு பேரும் டீச்சர்கள், நாங்கள் பாடம் சம்பந்தமாக பேசிக்கொள்வோம். அதை கேட்க நீ யார்?’’ என்றார். இதனால் இவர்களுக்குள் மோதல் ஏற்பட்டது.இந்த விவகாரம் திருமானூர் போலீசுக்கு சென்றது.

போலீசார் ராஜராஜனையும், ஹென்றியையும் அழைத்து எச்சரித்தனர். ‘‘அடுத்தவன் பொண்டாட்டிக்கு ஏன் நீங்க சண்டை போடுகிறீர்கள். இனி இப்படி நடந்தால் 3 பேரையும் கைது செய்வோம். பின்னர் அசிங்கமாக போய்விடும்’’ என கூறி உள்ளனர். ஆனால், மீண்டும் இந்த முக்கோண காதல் தொடர்ந்தது. இதை ராஜராஜன் மீண்டும் கண்டித்தார். இந்நிலையில், கடந்த 16ம் தேதி ஆசிரியர் ஹென்றியும், அவரது ஆதரவாளர்கள் சிலரும் ராஜராஜனை சரமாரியாக உருட்டு கட்டையால் தாக்கினர். அரிவாளால் வெட்டினர். இதனை தட்டிக்கேட்க வந்த ராஜராஜனின் சித்தப்பா சவுந்திரராஜனையும் அரிவாளால் வெட்டினர்.

இது குறித்து திருமானூர் போலீசார் வழக்குப் பதிந்து, ஆசிரியர் ஹென்றியை நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர். ஹென்றியை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முத்துகிருஷ்ணன் நேற்று மாலை உத்தரவிட்டார். அத்துடன் இந்த சண்டைக்கு மூல காரணமாக இருந்த ஆசிரியையை அதிகாரிகள் அழைத்து ரகசிய விசாரணை நடத்தி எச்சரித்து உள்ளனர். ‘‘இனியாவது ஒழுக்கமாக இருந்துகொள்’’ என்று கூறி உள்ளனர். இந்த வெட்டு, குத்துக்கு காரணமான ஆசிரியைக்கு 2 குழந்தைகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : teacher ,children ,arrest ,Ariyalur , Married teacher, Ariyalur, sickle cut, counterfeiting, arrest,
× RELATED அரசு ஊழியர்கள் மீது கரிசனை போல...