வாட்ஸ் அப் மூலம் செல்போனை வேவு பார்க்கும் பாக். உளவுத்துறை : வாட்ஸ்அப் செயலியில் செட்டிங்கை மாற்ற ராணுவ வீரர்களுக்கு அறிவுரை

புதுடெல்லி: ராணுவ வீரர்கள் தங்களது வாட்ஸ்அப் செயலியில் செட்டிங்கை மாற்ற வேண்டும் என இந்திய ராணுவம் வலியுறுத்தியுள்ளது. இந்தியா ராணுவ வீரர்களின் செல்போனை பாகிஸ்தான் உளவு நிறுவனங்கள் வேவு பார்க்காமல் தடுக்க இந்த அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இந்திய வீர‌ர்களின் செல்போன் எண்கள், அனுமதியின்றி பாகிஸ்தான் வாட்ஸ் அப் குரூப்களில் இணைக்கப்படுவதாக வெளியான தகவலை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்திய ராணுவம் அறிவுரை

*உலகளவில் வாட்ஸ் அப் சமூக தளத்தை அதிகளவில் பயன்படுத்துவர்கள் இந்தியர்கள். இந்நிலையில், செல்போன்களில் சேமித்து வைத்திருக்கும் வங்கி எண், கிரெடிட் கார்டு பாஸ்வேர்டு உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்களை வாட்ஸ் அப் மூலமாக திருட பாகிஸ்தான் உளவு நிறுவனங்கள் குறி வைத்திருப்பதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.

*சமீபத்தில் பாகிஸ்தான் உளவுத்துறையானது +9230332569307 என்ற பாகிஸ்தான் எண் மூலம் இந்திய ராணுவ அதிகாரி ஒருவரின் செல்போன் எண்னை அவரது அனுமதியின்றி, வாட்ஸ் அப் குரூப்களில் இணைத்துள்ளது.

*இதனை அறிந்த அந்த ராணுவ அதிகாரி உடனடியாக குரூப்பில் தம்மை இணைக்கப்பட்டதை screenshot எடுத்துவிட்டு குரூப்பை விட்டு வெளியேறினார். பின்னர் சற்றும் தாமதிக்காமல் உடனடியாக மேலதிகாரியிடம் புகார் தெரிவித்தார்.

*இதனையடுத்து இந்திய ராணுவ வீரர்கள் குழு ரீதியாகவும், தனிப்பட்ட ரீதியிலும் வாட்ஸ்-அப் பயன்பாட்டில் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

*ராணுவ வீரர்களும் அவர்களது குடும்பத்தினரும் வாட்ஸ்அப் செயலியில் செட்டிங்கை மாற்ற வேண்டும்

என்றும்  அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

*அதாவது Account >Privacy >Groups சென்று, அங்கு கொடுக்கப்பட்டிருக்கும் Nobody My Contacts; or Everyone; என்ற ஆப்ஷனில் My Contacts தேர்வு செய்வதன் மூலம் குறிப்பிட்ட செல்போன் எண்ணை உபயோகிப்பவரின் அனுமதியின்றி அவரை வாட்ஸ் அப் குரூப்களில் இணைக்க முடியாது.

*அத்துடன் வாட்ஸ்-அப் குழு நடவடிக்கைகளை தொடர்ச்சியாக ஆராய வேண்டும். ஏதாவது புதிய எண்கள் குழுவில் சேர்க்கப்பட்டால், இதுகுறித்து தகவல்களை அறிந்து கொள்ள வேண்டும்.

*வாட்ஸ்-அப் குழுவில் உள்ள எண்களை, பெயர்கள் கொண்டு உங்கள் மொபைலில் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு இல்லையெனில் புதிய எண்கள் குறித்து, விவரம் பெற்று உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

*அறியப்படாத மொபைல் எண்களை தொடந்து கண்காணிக்க வேண்டும். வாட்ஸ்-அப் குழு ரீதியிலும், தனிப்பட்ட ரீதியிலும் தொடர வேண்டும்.

Related Stories: