ஐஐடி, ஐஐஎம்-ல் ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதில் இடஒதுக்கீட்டை பின்பற்ற வேண்டும்; மனிதவள மேம்பாட்டு அமைச்சகம்

புதுடெல்லி: ஐஐடி, ஐஐஎம் போன்ற உயர்கல்வி நிலையங்களில் ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதில் இடஒதுக்கீட்டை பின்பற்ற வேண்டும் என்று மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கல்வி நிலையங்கள் மற்றும் தன்னாட்சி பெற்ற கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீட்டு கொள்கையை அமல்படுத்துவதில்லை என பரவலாக புகார் எழுந்தது. இது பற்றி ஆலோசனை நடத்திய நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினர்கள் உயர்கல்வி கல்வி நிலையங்களில் இடஒதுக்கீட்டை அமல்படுத்துமாறு மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தை கேட்டுக் கொண்டுள்ளது.

இதனையடுத்து உயர்கல்வி நிலையங்களுக்கு கடந்த வாரம் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் கடிதம் ஒன்று எழுதியுள்ளது. இதில் ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதில் இடஒதுக்கீடு கொள்கையை பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு 15%. பழங்குடியினத்தினருக்கு 7.5%, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27%, பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர்ஜாதியினருக்கு 10 சதவீதம் என ஆசிரியர் பணியிடங்கள் இடஒதுக்கீடு பின்பற்றப்பட வேண்டும் என ஐஐஎம் கல்வி நிலையம் முந்தைய உத்தரவை பின்பற்றி வந்ததே பிரச்னைக்கு காரணம்.

Related Stories: