பாம்பு கடித்து மாணவி மரணம்: கேரள அரசை கண்டித்து பள்ளி, கல்லூரி மாணவர்கள் போராட்டம்

திருவனந்தபுரம்: கேரளாவில் பள்ளி வகுப்பறையில் பாம்பு கடித்து மாணவி ஒருவர் உயிரிழந்ததை கண்டித்து பள்ளி, கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். வயநாடு மாவட்டம் சுல்தான் பத்தேரியில் உள்ள சர்வஜென அரசுப்பள்ளியில் இந்த துயர சம்பவம் நடந்துள்ளது. வகுப்பறையில் 5ம் வகுப்பு மாணவி சகிலா செரினை சுவற்றின் ஓட்டையில் பதுங்கி இருந்த பாம்பு கடித்துள்ளது. இதுகுறித்து மாணவர்கள் ஆசிரியரிடம் தெரிவித்தனர். இதனை ஆசிரியர் விஜில் பொருட்படுத்தாமல் போனதால் 10 நிமிடங்களில் மாணவி  சகிலா செரின் மயக்கமடைந்தார். மாணவி மயக்கம் அடைந்த பிறகே பாம்பு கடித்தது தெரியவந்துள்ளது. பிறகு மாணவியை அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

அங்கு விஷ முறிவு மருந்து இல்லாமல் போனதால் பள்ளிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் சகிலா செரின் உரியிரிழந்துவிட்டார். இதனை கண்டித்து சுல்தான் பத்தேரி பள்ளி முன்பு மாணவர்கள் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய வயநாடு மாவட்ட ஆட்சியர் அலட்சியமாக இருந்தததாக கூறி ஆசிரியர் விஜில், அரசு மருத்துவர் மரியா ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். எனினும் வயநாடு மாவட்ட ஆட்சியர் அலுவலகம், கல்வித்துறை அலுவலகம் முன்பு பல்வேறு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆசிரியர் விஜில் மற்றும் மருத்துவர் மரியாவை கைது செய்ய வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories: