×

கொலை முயற்சி வழக்கில் முன்னாள் எம்.எல்.ஏ. - க்கு 3 ஆண்டு சிறை: சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

சென்னை: மனைவியை கொள்ள முயன்ற வழக்கில் முன்னாள் எம்.எல்.ஏ. அசோகனுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து எம்.பி., எம்.எல்.ஏக்கள் மீதான வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சென்னை பட்டினப்பாக்கத்தில் வசித்து வரும் முன்னாள் எம்.எல்.ஏ. அசோகன் தனது மனைவி மற்றும் மாமியாரை துப்பாக்கியால் சுட்டு கொள்ள முயன்றதாக கடந்த 2015ல் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. எம்.பி. எம்.எல்.ஏக்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி சாந்தி முன்னிலையில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. தொடர்ந்து, இருதரப்பு வாதங்களும் முடிவடைந்ததை அடுத்து அசோகனுக்கு மூன்றரை ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 11 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி சாந்தி தீர்ப்பு வழங்கினார். தீர்ப்பு வெளியான சிறிது நேரத்தில் அசோகன் மேல்முறையீடு செய்வதற்கு வசதியாக தண்டனை நிறுத்திவைக்கப்படுவதாக சிறப்பு நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.

மனைவியை கொள்ள முயன்ற வழக்கில் தண்டனை வழங்கப்பட்டுள்ள அசோகன் 1996 முதல் 2006 வரை திருவாரூர் தொகுதி எம்.எல்.ஏ. வாக இருந்தவராவார். அசோகன் கடந்த 2006ல் திமுக-வில் இருந்து விலகி அதிமுக-வில் இணைந்தார். அசோகன் மீதான வழக்கோடு சேர்த்து எம்.பி. எம்.எல்.ஏ.க்களுக்கான சிறப்பு நீதிமன்றம் இதுவரை 4 தீர்ப்புகளை வழங்கியிருக்கிறது. பெரம்பூர் முன்னாள் எம்.எல்.ஏ.வுக்கு பாலியல் வழக்கில் 10 ஆண்டுகள் சிறை தண்டனை, பொதுச்சொத்துக்களை சேதப்படுத்தியதாக ஓசூர் முன்னாள் எம்.எல்.ஏ. பாலகிருஷ்ணா ரெட்டிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை, தேசத்துரோக வழக்கில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு 2 ஆண்டுகள் சிறை உள்ளிட்டவை சிறப்பு நீதிமன்றம் இதற்கு முன்னர் வழங்கிய தீர்ப்புகளாகும்.


Tags : MLA ,prison , Murder attempt, prosecution, ex-MLA, jail, special court
× RELATED மக்கள் சாரைசாரையாக வந்து இந்தியா...