தமிழகத்தில் 3 அரசு மருத்துவமனைகளின் விரிவாக்க பணிகளுக்கு ரூ.400 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியீடு

சென்னை: தமிழகத்தில் 3 புதிய மருத்துவமனைகளுக்கான நிதியை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது. மூன்று அரசு மருத்துவ கல்லூரியுடைய விரிவாக்கம் மற்றும் நவீன கூடுதல் வசதியை மேம்படுத்துவதற்காக 400 கோடி ரூபாயை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது. பொதுப்பணி துறை வாயிலாக அரசு மருத்துவ கல்லுாரிகள் மற்றும் மருத்துவமனைகள் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதற்கான நிதியை பொதுப்பணி துறைக்கு சுகாதார துறையினர் வழங்கி வருகின்றனர். அந்த வகையில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை நிர்வாகத்தில் கூடுதல் நவீன வசதிகளை மேம்படுத்துவதற்கு 24 கோடி ரூபாயை தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

இதனை போலவே சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரிகளின் வசதிகளை மேம்படுத்த 140 கோடி ரூபாய் எனவும், மதுரை மாவட்டத்தின் அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையை மேம்படுத்துவதற்கு 131 கோடி ரூபாய் எனவும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிதிகளின் மூலமாக புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கும், நவீன வசதிகளுடன் சிகிச்சை அளிக்கக்கூடிய இயந்திரங்கள் மற்றும் மருத்துவம் சார்ந்த உபகரணங்கள் வாங்குவதற்கும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இதனால் சென்னை, மதுரை மற்றும் கோவையில் இருக்கக்கூடிய அரசு மருத்துவமனையின் தரம் விரைவில் உயர்த்தப்படும் என தமிழக அரசு மற்றும் சுகாதாரத்துறை தெரிவித்திருந்த நிலையில், 400 கோடி ரூபாய்  ஒதுக்கீடு செய்யப்பட்டு 3 மருத்துவமனைகளின் விரிவாக்க பணிகளுக்கான அரசாணை வெளியிடப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Stories: