நேபாலை சேர்ந்த நிம்ஸ் புர்ஜால் 189 நாளில் 14 சிகரங்கள் ஏறி சாதனை

காத்மண்ட்: நேபாளத்தை சேர்ந்த நிர்மல் நிம்ஸ் புர்ஜால், இவர் பிரிட்டிஷ் ராணுவத்தில் பயிற்சி பெற்று வந்துள்ளார். மலையேறும் முயற்சிக்காக விடுப்பு எடுக்க  அனுமதி கிடைக்காததை தொடர்ந்து வேலையை ராஜினாமா செய்தார்.

மலையேறும் சாகசத்தில் அதிக ஆர்வம் கொண்ட நிம்ஸ் புர்ஜால் பயண செலவுக்காக தனது சொந்த வீட்டை விற்றுள்ளார். பின்னர் அவர் சீனாவில் உள்ள 8027 மீட்டர்  உயரம் கொண்ட மவுண்ட் ஷிஷாபங்மா  போன்ற 14 சிகரங்களையும் வெறும் 189 நாட்களில் ஏறி முந்தைய சாதனையை முறியடித்துள்ளார். தற்போது இந்த சாகச நாயகனுக்கு பலரும் பாராட்டு மழை பொழிந்து வருகின்றனர்.

alignment=

நிம்ஸ் புர்ஜால் கடந்த ஏப்ரல் மாதம் சாகச பயணத்தை தொடங்கினார். ஏப்ரல் மாதம் 23ம் தேதி நேபாளில் உள்ள மவுண்ட் அன்பூர்ணாவையும் , மே 12 மவுண்ட்  தவுலகிரியையும் , மே 15 மவுண்ட்   காஞ்சன்ஜங்காவையும் ,மவுண்ட்   எவெரெஸ்டை மே 22ம் தேதியும் ஏறி அசத்தினார்.

மேலும் மவுண்ட் லோட்சேவை மே 22ம் , மே 24ம் தேதி மவுண்ட் மக்காலுவையும் ,செப்டம்பர் 27ம் தேதி மவுண்ட் மனஸ்லுவை ஏறினார். பாகிஸ்தானில்  உள்ள மவுண்ட் நங்கா பர்பத்தை ஜூலை 3ம் தேதியும் ,மவுண்ட் காஷர்பிரம் 1-ஐ ஜூலை 15ம் தேதியும் ,மவுண்ட் காஷர்பிரம் 2-ஐ ஜூலை 18 ம் தேதியும் ஏறினார்.

alignment=

ஜூலை 24ம் தேதி மவுண்ட் கே2 வையும் ,மவுண்ட் பிராட் பீக்கை ஜூலை 24ம் தேதியும் நிர்மல் நிம்ஸ் புர்ஜால் ஏறினார். சீனாவில் உள்ள மவுண்ட் சோ யூவை செப்டம்பர் 23ம் தேதி ஏறினார்.கடைசி சிகரமான மவுண்ட் ஷிஷாபங்மாவை ஏற சீனா அரசாங்கம் அனுமதி அளிக்காத நிலையில் நிர்மல் நிம்ஸ் புர்ஜால் நேபாள அரசின் உதவியை நாடினர். நேபாள அரசு சீனா அதிகாரிகளுடன் பேசி அனுமதி வாங்கி தந்த நிலையில் அக்டோபர் 29ம் தேதி இந்த சாதனையை படைத்தார் புர்ஜால்.

இவருக்கு முன்பாக தென்கொரியாவை சேர்ந்த கிம் சாங் 14 சிகரங்களை 7 வருடங்கள் ,10 மாதங்கள் மற்றும் 6 நாட்களில் எறியதே சாதனையாக இருந்துள்ளது.

Related Stories: