×

தமிழகத்தின் நாகை, கடலூர் , தேனி, திருவாரூர் மாவட்டங்களில் பரவலாக மழை..!

சென்னை: தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக நாகை, கடலூர் , தேனி ,திருவாரூர்  உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. வடகிழக்கு பருவமழை மிதமான அளவில் பெய்து வருகிறது தெற்கு மாவட்டங்களான திருநெல்வேலி,ராமேஸ்வரம் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில்  அதிக அளவு மழை பெய்துள்ளது இதனிடையே இன்று முதல் இரண்டு நாட்களுக்கு  தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

நேற்று இரவு சென்னையில் இரவு முழுவதும் மழை விட்டு விட்டு பெய்துள்ளது. இதனால் காலையில் இதமான வானிலை நிலவுவதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

நாகை மாவட்டத்தில் மழை;
நாகை மற்றும் சுற்றுவட்டார இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. சீர்காழி , பூம்புகார் , வைத்தீஸ்வரன் கோயில் தரங்கம்பாடி மற்றும் கொள்ளிடத்தில்  மலை பெய்து வருகிறது. இதனால் வெப்பம் குளிர்ந்து இதமான சூழல் நிலவுவதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கடலூர் மாவட்டத்தில் மழை ;
கடலூர் மற்றும் சுற்றுவட்டார இடங்களில் மழை பெய்து வருகிறது. விருத்தாச்சலம்,திட்டக்குடி நெய்வேலி   உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது. இதனால் மக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.  

திருவாரூர் மாவட்டத்தில் மழை;

திருவாரூர் மற்றும் சுற்றுவட்டார ஊர்களில் மழை பெய்து வருகிறது. மன்னார்குடி , திருத்துறைப்பூண்டி , மற்றும் மாவட்டத்தின் பல்வேறு   ஊர்களில் மழை பெய்து வருகிறது. தொடர்ந்து மழை பெய்துவருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

தேனி மாவட்டத்தில்  மிதமான மழை:
தேனி மாவட்டம் பெரியகுளம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது.

Tags : Nagai ,districts ,Cuddalore ,Theni ,Tamil Nadu ,Thiruvarur , Rains , theni, cuddalore, theni, nagapatinam, thiruvarur
× RELATED நாகை மாவட்டத்தில் விடிய, விடிய கொட்டித்தீர்த்த கனமழை