×

மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர் பதவிக்கு விருப்ப மனு தாக்கல் செய்தவர்கள் பணத்தை திரும்ப பெறலாம்: இபிஎஸ், ஓபிஎஸ் கூட்டாக அறிவிப்பு

சென்னை: அதிமுக சார்பில் உள்ளாட்சி தேர்தலுக்காக மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர் பதவிக்கு விருப்ப மனு தாக்கல் செய்தவர்கள் பணத்தை திரும்ப பெறலாம் என்று இபிஎஸ், ஓபிஎஸ் கூட்டாக அறிவித்துள்ளனர். இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக அரசு, மாநகராட்சி மேயர், நகர மன்ற தலைவர், பேரூராட்சி மன்ற தலைவர் ஆகிய பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடைபெறும் என்று அறிவித்துள்ளது. இந்த நிலையில், மாநகராட்சி மேயர், நகர மன்ற தலைவர், பேரூராட்சி மன்ற தலைவர் ஆகிய பதவிகளுக்கு அதிமுக சார்பில் போட்டியிட வாய்ப்பு வேண்டி விருப்ப மனு அளித்துள்ளவர்கள், தாங்கள் சார்ந்த மாநகராட்சி வார்டு, நகர மற்றும் பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு அதிமுக சார்பில் வேட்பாளர்களாக போட்டியிட விரும்புகிறவர்கள் 22ம் தேதி (இன்று) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை, சம்பந்தப்பட்ட மாவட்ட தலைநகரங்களில், விருப்ப மனுக்களை பெறுவதற்காக ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட நிர்வாகிகளிடம், உரிய கட்டண தொகையை செலுத்தி, விண்ணப்ப படிவங்களை பெற்று பூர்த்தி செய்து வழங்கலாம்.

மாநகராட்சி மேயர், நகர மன்ற தலைவர், பேரூராட்சி மன்ற தலைவர் ஆகிய பதவிகளுக்கு அதிமுக சார்பில் போட்டியிட வாய்ப்பு வேண்டி ஏற்கனவே கட்டணம் செலுத்தி விருப்ப மனு அளித்துள்ளவர்கள், அதிமுக பொதுக்குழு முடிந்தவுடன், தாங்கள் செலுத்திய விண்ணப்ப கட்டண தொகைக்கான அசல் ரசீதுடன் 25.11.2019 முதல் 29.11.2019 வரை தலைமை கழகத்திற்கு நேரில் வந்து, அந்த தொகையை பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : petitioners ,OPS , EPS, OPS
× RELATED ஒரிஜினலை ரவுண்டு கட்டும் டூப்ளிக்கேட்டுகள்: ‘OPS’களின் அட்ராசிட்டி