×

மண்டபம் டிஜிபி அசுதோஷ் சுக்லா சென்னைக்கு மாற்றம்

சென்னை: மண்டபம் அகதிகள் முகாம் டிஜிபியாக இருந்த அசுதோஷ் சுக்லா, சென்னை எம்டிசி போக்குவரத்து விஜிலன்ஸ் டிஜிபியாக மாற்றப்பட்டுள்ளார். கடந்த மக்களவை தேர்தலின்போது தேர்தல் ஆணையத்தால் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக நியமிக்கப்பட்டவர் அசுதோஷ் சுக்லா. இவர், மாநிலம் முழுவதும் உள்ள போலீஸ் அதிகாரிகளிடம் நேர்மையாக நடக்க வேண்டும். ஒரு சார்பாக செயல்படக்கூடாது என்று எச்சரித்தார். அதை மீறி செயல்பட்ட உளவுத்துறை அதிகாரிகள் உள்பட பலரையும் மாற்றும்படி தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடார். இதனால் நேர்மையாக செயல்பட்ட டிஜிபி அசுதோஷ் சுக்லா மீது ஆளும் கட்சி கடும் அதிருப்தி அடைந்தது.

தேர்தல் நடைமுறைகள் முடிந்ததும், தேர்தல் டிஜிபியாக இருந்த அசுதோஷ் சுக்லா, மண்டபம் அகதிகள் முகாமுக்கு மாற்றப்பட்டார். இந்த மாற்றத்தால், தமிழக ஐபிஎஸ் அதிகாரிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். பலர் மத்திய அரசு பணிக்கு செல்ல ஆரம்பித்தனர். இந்தநிலையில், தமிழக அரசு நேர்மையான அதிகாரியாக செயல்பட்ட அசுதோஷ் சுக்லாவை, சென்னை எம்டிசி போக்குவரத்து விஜிலன்ஸ் டிஜிபியாக மாற்றி நேற்று உத்தரவிட்டது.

Tags : hall ,DGP ,Ashutosh Shukla Madras ,Ashutosh Shukla , Ashutosh Shukla
× RELATED திருமண மண்டபத்தில் மொய்ப்பணம் திருடிய ஆசாமிக்கு வலை