நீட் தேர்வு ஆள்மாறாட்டம்: மாணவர்களின் பெற்றோருக்கு காவல் நீட்டிப்பு

தேனி: நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்ததாக, தேனி அரசு மருத்துவக்கல்லூரி மாணவர்  உதித்சூர்யா, அவரது தந்தை  வெங்கடேசன், சென்னையை சேர்ந்த தனியார் மருத்துவக்கல்லூரி மாணவர்களான பிரவீன்  (21), ராகுல் (20), இவர்களது தந்தையர் சரவணன் (44), டேவிஸ் (47), மாணவி  பிரியங்காவின் தாய் மைனாவதி மற்றும் தர்மபுரியை சேர்ந்த மாணவர் இர்பான்,  அவரது தந்தை முகமது சபி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மாணவர்களுக்கு மட்டும் ஜாமீன் வழங்கப்பட்டது.

மாணவர்களின் பெற்றோர்களின் ஜாமீன் மனு விசாரணை, தேனி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. நேற்று இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பன்னீர்செல்வம், 5 பேரின் காவலையும் வரும் டிச. 5 வரை நீட்டித்து உத்தரவிட்டார்.

Tags : parents , NEET
× RELATED உள்ளாட்சி தேர்தலில் திமுகவுடன் வல்லரசு பா.பி. கூட்டணி நீடிப்பு