குழந்தைகளுக்கு வலிப்பு நோய் ஏற்படுவதை தடுக்க சென்னை மருத்துவ கல்லூரி உட்பட 3 கல்லூரிகளில் பிரமாண்ட ஆய்வு: இந்தியா - இங்கிலாந்து நிபுணர்கள் கூட்டு முயற்சி

லண்டன்: வலிப்பு நோயை தடுப்பதற்காக மூளை காயங்களுடன் பிறக்கும் குழந்தைகள் பற்றிய விரிவான மற்றும் உலகில் இதுவரை இல்லாத  வகையிலான பிரமாண்டமான ஆய்வை இந்தியா, இங்கிலாந்து நிபுணர்கள் தொடங்கி உள்ளனர். பிரசவத்தின் போது குழந்தையின் மூளையில் ஏற்படும் காயங்கள்தான் மூளைக்கு செல்லும் ஆக்ஸிஜனை தடை செய்கிறது. இதுதான் வலிப்பு ஏற்பட  காரணமாக அமைகிறது. இந்த பாதிப்பு உலகம் முழுவதும் ஏற்படுகிறது. இதை தடுப்பதற்கான விரிவான ஆராய்ச்சியை இந்திய நிபுணர்களும்,  லண்டனில் உள்ள இம்பீரியல் கல்லூரி நிபுணர்களும் கூட்டாக தொடங்கி உள்ளனர். இந்த ஆராய்ச்சி திட்டத்துக்கு, தேசிய சுகாதார ஆராய்ச்சி மையம்  ₹31 கோடி வழங்கியுள்ளது.

இது தொடர்பான ஆராய்ச்சியில் இந்தியா, இங்கிாலந்து மையங்களில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் அடுத்த 4 ஆண்டுகளுக்கு ஈடுபட உள்ளனர்.  பிரசவ  காலத்தில் ஏற்படும் இந்த மூளை பாதிப்பு மிகவும் சிக்கலானது.  இந்த மூளை காயங்களை குறைப்பதற்காக ‘கேர் பண்டில்’ என்ற முறையை  அறிமுகம் செய்யலாம் என இவர்கள் நம்புகின்றனர்.

இதில், பல விஷயங்கள் அடங்கியுள்ளன. குழந்தையின் இதய துடிப்பு கண்காணிப்பு, பிரசவம் தொடர்பான முழு தகவல்கள் அடங்கிய தொகுப்பு  (இ-பார்டோகிராம்), குழந்தையை உணர்வு நிலைக்கு கொண்டு வருதல் போன்ற நடைமுறைகளை பின்பற்ற வேண்டும்.

இதற்கான ஆராய்ச்சி, பெங்களூர் அரசு மருத்துவக் கல்லூரி, சென்னை அரசு மருத்துவக் கல்லூரி, கோழிக்கோடு அரசு மருத்துக் கல்லூரிகளில் 80  ஆயிரம் பெண்களிடம் நடத்தப்பட உள்ளது. அப்போது, எலக்ட்ரோ என்செபலோகிராம் (இஇஜி), எம்ஆர்ஐ ஸ்கேன் ஆகியவை மூலம் மூளை பாதிப்புடன்  பிறந்த குழந்கைளிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த ஆய்வின் கண்டுபிடிப்புகள், உலகம் முழுவதும் உள்ள குழந்தைகளுக்கு வலிப்பு நோய்  ஏற்படுவதை தடுக்க உதவும் என ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Related Stories: