ஆஸ்திரேலியாவுடன் முதல் டெஸ்ட் போட்டி பாகிஸ்தான் ஆல் அவுட்

பிரிஸ்பேன்: ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள  பாகிஸ்தான் 2 போட்டிகளை கொண்ட  ஐசிசி உலக கோப்பை சாம்பியன் தொடரில் விளையாடுகிறது. பிரிஸ்பேனில் நேற்று முதல் டெஸ்ட் தொடங்கியது.டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் களம் கண்டது.  முதல் விக்கெட்டுக்கு 75 ரன் எடுத்த பாகிஸ்தான் அடுத்தடுத்து விக்கெட்களை பறிகொடுத்தது.

அதே நேரத்தில்  ஷான் மசூத் 27, கேப்டன் அசார் அலி 39,  அசாத் ஷபீக் 76, முகமது ரிஸ்வான் 37,  யாசிர் ஷா 26 ரன் எடுத்ததால் பாகிஸ்தான் கவுரமான ஸ்கோரை எட்டியது. ஆஸ்திரேலியா வீரர்களின் வேகத்தில் பாகிஸ்தானின் முதல் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. அந்த அணி 86.2 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 240 ரன் எடுத்தது. ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க் 4, பேட் கம்மின்ஸ் 3, ஜோஷ் ஹசல்வுட் 2,  நாதன் லயன் ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.

Related Stories: