நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் இங்கிலாந்து நிதான ஆட்டம்

மவுண்ட் மவுங்கானு: நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 டி20, 2 டெஸ்ட் ேபாட்டிகளில் விளையாடுகிறது. டி20 தொடரை 2-2 என்ற கணக்கில் 2 அணிகளும் சமன் செய்தன. இந்நிலையில் முதல் டெஸ்ட் போட்டி மவுண்ட் மவுங்கானுவில் தொடங்கியது. டாஸ்  வென்ற இங்கிலாந்து  முதலில் களமிறங்கியது. சீரான இடைவெளியில் விக்கெட்கள் விழுந்தன.

ஆனாலும் கேப்டன் ஜோ ரூட்(2ரன்) தவிர மற்றவர்களின் பொறுப்பான ஆட்டத்தால் இங்கிலாந்து முதல்நாள் ஆட்ட நேர முடிவில் 90 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 241 ரன் எடுத்தது. அந்த அணியின்  ரோரி பர்ன்ஸ் 52, டோம் சிப்லே 22,  ஜோ டேன்லி 74 ரன் எடுத்தனர்.  பென் ஸ்டாக்ஸ் 67, வோலி போப் 18 ரன்களுடன் களத்தில் உள்ளனர். நியசிலாந்து தரப்பில்  , கிராண்ட்ஹோம் 2, டிம் சவுத்தி, நெயில் வாக்னர் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

Related Stories: