வெ.இண்டீசுக்கு எதிரான இந்திய அணிகள் அறிவிப்பு

வெஸ்ட் இண்டீஸ் அணி  டிசம்பர் மாதம் இந்தியாவில்  சுற்றுப் பயணம் மேற்கொண்டு  3 ஒருநாள்,  3 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இந்தப் போட்டிகளுக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது.சுமார் இரண்டரை ஆண்டுகளுக்கு பிறகு முகமது ஷமி  மீண்டும் டி20 அணிக்கு தேர்வாகி உள்ளார். தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் டி20 அணியில் தொடர்கிறார். வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான போட்டியில் விளையாட உள்ள இந்திய அணி விவரம்....ஒருநாள் அணி: விராட் கோஹ்லி(கேப்டன்), ரோகித் சர்மா, ஷிகர் தவான், லோகேஷ் ராகுல், ரிஷப் பண்ட், மணீஷ் பாண்டே,  ஸ்ரேயாஸ் அய்யர், கேதர் ஜாதவ், ரவீந்திர ஜடேஜா, சிவம் துபே, யஜ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், முகமது ஷமி, தீபக் சாஹர், புவனேஷ்வர் குமார்.

டி20 அணி: விராட் கோஹ்லி(கேப்டன்), ரோகித் சர்மா, ஷிகர் தவான், லோகேஷ் ராகுல், ரிஷப் பண்ட், மணிஷ் பாண்டே, ஸ்ரேயாஸ் அய்யர், சிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, வாஷங்டன் சுந்தர், யஜ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், தீபக் சாஹர், புவனேஷ்வர் குமார், முகமது ஷமி

Related Stories: