உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் இளவேனில், மனு, திவ்யனஷ் தங்கம்

புடியான்: சீனாவில் நடைபெறும் உலக கோப்பை இறுதிச் சுற்று துப்பாக்கிச் சுடும் போட்டியில் தமிழக வீராங்கனை இளவேனில், மனு, திவ்யனஷ் ஆகியோர் தங்கம் வென்றதால் இந்தியா பதக்கப்பட்டியலில் முதலிடத்தை பிடித்தது.சீனாவில் உள்ள  புடியான் நகரில்  உலக கோப்பை இறுதிச் சுற்று துப்பாக்கிச் சுடும் போட்டி நடக்கிறது. போட்டி தொடங்கி முதல் 2நாட்களாக பதக்கம் வெல்லாமல் இந்திய அணி பின்னடைவை சந்தித்தது. இந்நிலையில் 3ம் நாளான நேற்று  பெண்களுக்கான 10மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் மனு பாக்கர்(17) 244.7புள்ளிகளை ஈட்டி தங்கம் வென்று சாதனையும் படைத்தார்.

அடுத்த ஒரு மணி நேரத்தில்  பெண்களுக்கான 10மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் தமிழகத்தின் இளவேனில் வாலறிவன்(20)  தங்கம் வென்று அசத்தினார். அவர் 250.8 புள்ளிகள் ஈட்டி முதலிடத்தை பிடித்தார். இந்தப் பிரிவில்  தைவானின் லின் யிங் சின்250.7 புள்ளிகளுடன் வெள்ளியும், ருமேனியாவின்  லாரா  ஜார்ஜடா 229 புள்ளிகளுடன் வெண்கலமும் பெற்றனர்.சர்வதேச போட்டியில்  இளவேனில் வெல்லும் 2வது தங்கம் இது. அவர் செப்டம்பர் மாதம் பிரேசலில் நடைபெற்ற போட்டியிலும் தங்கம் வென்றது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து ஆண்களுக்கான 10மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்தியாவின் திவ்யனஷ் சிங்(17) 250.1 புள்ளிகளை சேர்த்து தங்கம் வென்றார். இந்தப் பிரிவில் ஹங்கேரியின் பெனி இஸ்ட்வன் 250 புள்ளிகளுடன் வெள்ளியும்,  ஸ்லோவாக்கியாவின்  ஜானி பெட்ரிக் 228.4 புள்ளிகளுடன் வெண்கலமும் வென்றனர். ஒரே நாளில் 3 தங்கங்களை வென்றதையடுத்து  பதக்கப்பட்டியலில் இந்தியா முதல் இடத்துக்கு முன்னேறியது.

Related Stories: