×

இளஞ்சிவப்பு பந்து சவால்தான் சந்திக்க தயாராக இருக்கிறோம்: கேப்டன் கோஹ்லி

கொல்கத்தா:  இளஞ்சிவப்பு பந்தில் விளையாடுவது சவாலாக இருக்கும். ஆனால் அதனை சந்திக்க தயாராக இருக்கிறோம்’ என்று இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி தெரிவித்தார்.இந்திய கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக இந்தியா அணி விளையாடும்  பகல்/இரவு டெஸ்ட் போட்டி கொல்கத்தாவில் இன்று தொடங்குகிறது. வங்க தேசத்துடன் மோதும் இந்த டெஸ்ட் போட்டியில் இளஞ்சிவப்பு நிற பந்து பயன்படுத்தப்பட உள்ளது. அதற்காக பிசிசிஐ 72 பந்துகளை வாங்கியுள்ளது.வெளிநாடுகளில் பகல்/இரவு டெஸ்ட் போட்டி நடத்தியிருந்தாலும் இந்தியாவில் முதல் முறை என்பதால்  போட்டியை காண வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பிசிசிஐ தலைவரும், பகல்/இரவு டெஸ்ட் நடக்க காரணமான சவுரவ் கங்குலி உள்ளிட்ட நிர்வாகிகள், கபில்தேவ், ராகுல் திராவிட்  உள்ளிட்ட முன்னாள் வீரர்கள் உட்பட ஏராளமான விஐபிகள் முதல்நாள் போட்டியை காண செல்கின்றனர்.

இந்தபோட்டியில் பங்கேற்பதற்க உள்ள இந்திய, வங்கதேச அணிகள் கடந்த 2 நாட்களாக தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வந்தனர். முதல் டெஸ்டில் இன்னிங்ஸ் வெற்றி பெற்ற இந்தியா, புதிய முறையில் நடத்தப்படும் 2வது டெஸ்டையும் கைப்பற்றும் முனைப்பில் உள்ளது.பயிற்சிக்கிடையில்  நேற்று செய்தியாளர்களை சந்தித்த இந்திய கேப்டன் விராட் கோஹ்லி, ‘‘ கொல்கத்தாவில் நடைபெற உள்ள  பகல்/இரவு டெஸ்ட் போட்டி  இந்திய கிரிக்கெட் வரலாற்றில் முக்கிய நிகழ்வாக இருக்கும்.  இளஞ்சிவப்பு பந்தில் விளையாடுவது எங்களுக்கு நிச்சயம் பெரிய சவாலாக இருக்கும். இளஞ்சிவப்பு பந்து அதிகம் எகிறும் என்பதால் பீல்டிங் செய்வது சிரமமாக இருக்கும். அது ஸ்லிப்பில் நின்று பந்தை தடுக்கும் போது, பந்து கைகளை கடுமையாக தாக்கும். பந்தை இலக்கு நோக்கி வீச வீரர்கள் கூடுதல் முயற்சி எடுக்க வேண்டும்.

அதே நேரத்தில் புதுவிதமான போட்டி என்பதால் அந்த சவாலை நாங்கள் உற்சாகமாக எதிர்கொள்ள இருக்கிறோம். வெற்றிக்காக எங்களின் முழு ஆட்டத்திறனையும் வெளிப்படுத்துவோம். ஆஸ்திரேலியாவுடன் முன்பு பகல்/இரவு டெஸ்ட் ஆட மறுத்தத்தற்கு காரணம் பயிற்சி ஆட்டத்தில் விளையாடாமல் திடீரென அட்டவணையில் சேர்த்ததுதான் காரணம். டெஸ்ட் கிரிக்கெட்டை உற்சாகமானதாக மாற்றும் முயற்சி நல்லதுதான். ஆனால் மக்களை மகிழ்விக்க என்பதை அடிப்படையாக கொண்டு டெஸ்ட் கிரிக்கெட்டை உருவாக்க முடியாது. மக்களை கட்டாயப்படுத்த முடியாது’ என்றார்.பகல்/இரவு டெஸ்ட் போட்டியில் விளையாடும் 9வது நாடாக இந்தியா மாற உள்ளது.

Tags : Kohli , pink ball , challenge,Captain Kohli
× RELATED டி20 உலக கோப்பையில் விராட் கோஹ்லி நீக்கமா?: முன்னாள் வீரர்கள் காட்டம்