×

மேடவாக்கத்தில் கஞ்சா விற்ற ஒடிசா பெண் பிடிபட்டார்

வேளச்சேரி: மேடவாக்கத்தில் கஞ்சா விற்பனை செய்து வந்த ஒடிசா பெண்ணை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து 1.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.மேடவாக்கம், பிள்ளையார் கோயில் தெருவில்   பெண் ஒருவர் கஞ்சா விற்பனை செய்து வருவதாக பள்ளிக்கரணை காவல் நிலையத்துக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் நேற்று முன்தினம் மாலை அந்த பகுதியில் ரகசியமாக கண்காணித்தனர். அப்போது, அங்குள்ள ஒரு வீட்டில் இளைஞர்கள் அதிகளவில் வந்து செல்வது தெரிந்தது. உடனே, அந்த வீட்டில் போலீசார் அதிரடியாக சோதனை செய்தனர். அப்போது, அங்கு கஞ்சா விற்பனை நடைபெறுவது தெரிந்தது.

அந்த வீட்டில் குடியிருந்த பெண்ணை பிடித்து விசாரித்தபோது,   ஒடிசாவை சேர்ந்த பென்னி (30) என்பதும்,  வீடு வாடகைக்கு எடுத்து   கஞ்சா விற்று வந்ததும் தெரியவந்தது. அவரிடம் இருந்து 1.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.   இதையடுத்து, அவரை கைது செய்து, புழல் சிறையில் அடைத்தனர்.Tags : Odisha ,Medavakkam , Selling ganja, Medavakkam, , Odisha woman ,aught
× RELATED ஒடிசா வாலிபரை கொன்று கிருஷ்ணா...