×

நோயாளிகள் தொடர் மரணம் எதிரொலி கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையில் உணவு, தண்ணீர் மாதிரி பரிசோதனை

சென்னை: கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவமனை 5வது வார்டில் கடந்த இரு வாரங்களில் 4 மனநோய் மாற்றுத்திறனாளிகள் மர்மமான தொற்றுநோய் தாக்கி இறந்திருப்பதாக கூறப்படுகிறது. மேலும்,   அந்த வார்டில் 80க்கும்  மேற்பட்ட மனநோயாளிகள் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 15க்கும் மேற்பட்டோர் தீவிர தொற்று நோயால் பாதிப்புகளுக்கு உள்ளாகி இருப்பதாகவும் கூறுகின்றனர். பாதிக்கப்பட்ட நோயாளிகளில் இருவர், இரு வாரங்களுக்கு முன்பே இறந்துள்ளனர்.  இறந்ததற்கான காரணங்களை அறிய விசாரணை கூட நடத்தாமல் நிர்வாகம் மறைத்ததாகவும் கூறப்படுகிறது.

பாதிப்புக்குள்ளாகி மரணமடைந்த மனநோய் மாற்றுத்திறனாளிகள் அனைவரும் ஒரே மாதிரியாக நீர்ச்சத்து குறைந்து, சிறுநீரகம் பாதித்து இறந்ததாக தெரிகிறது.  இது ஒரு தீவிர தொற்று நோயாக இருக்கலாம் என்ற பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது: அரசு மனநல காப்பகத்தில் இருந்து உடல் நல பரிசோதனைக்காக ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு நோயாளிகளை அனுப்புவது வழக்கமான நடைமுறையாகும். அவ்வாறு அனுப்பப்பட்ட ஏழு நோயாளிகளில் ஒருவர் மூளைத் தொற்றினாலும், இன்னொருவர் வலிப்பு பாதிப்பினாலும் உயிரிழந்தனர். இருந்தாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உணவு மற்றும் தண்ணீர் மாதிரிகள் கிண்டியில் உள்ள கிங் பரிசோதனை நிலையத்திற்கு அனுப்பப்பட்டு பரிசோதிக்கப்பட்டன. அவற்றில் கிருமி தொற்று எதுவும் இல்லை என்று ஆய்வு முடிவு வெளிவந்துள்ளது.



Tags : water sample testing ,hospital ,death , Echoes , series , patients Food ,water ,sample test
× RELATED தேர்தல் பிரச்சாரத்தின்போது திடீர்...