பாபர் மசூதி தீர்ப்பை மறுஆய்வு செய்ய கோரி அனைத்து கட்சிகள் ஆர்ப்பாட்டம்

சென்னை: பாபர் மசூதி வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வலியுறுத்தி தமிழக பாசிச எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பில் சென்னை சேப்பாக்கத்தில் நேற்று மாபெரும் ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் தலைமை வகித்தார். இதில் விசிக தலைவர் திருமாவளவன் எம்பி, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு எம்எல்ஏ.,  மமக தலைவர் ஜவாஹிருல்லா, எஸ்.டி.பி.ஐ. கட்சி தேசிய துணைத்தலைவர் தெகலான் பாகவி, எஸ்.டி.பி.ஐ. மாநில தலைவர் நெல்லை முபாரக், மமக பொதுச்செயலாளர் அப்துல் சமது, பச்சை தமிழகம் கட்சியின் தலைவர் சுப.உதயகுமார், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, விடுதலை தமிழ்ப்புலிகள் கட்சியின் தலைவர் குடந்தை அரசன், பாப்புலர் ப்ரண்ட் மாநில தலைவர் முகமது இஸ்மாயில், தமிழ் பேரரசு கட்சி தலைவர் இயக்குநர் கவுதமன் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட அமைப்பு மற்றும் கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டு பாபர் மசூதி வழக்கின் தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வலியுறுத்தி உரையாற்றினர்.

ஆர்ப்பாட்டத்தில் தலைவர்கள், பாபரி மசூதி வழக்கில் ஆதாரங்கள், ஆவணங்களின் அடிப்படையில் அல்லாமல், நம்பிக்கையின் அடிப்படையில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு வேதனைக்கு உள்ளாக்குகிறது. இத்தனை ஆண்டுகாலம் சட்டத்தையும், நீதிமன்றத்தையும் நம்பிய சமூகத்திற்கு இப்படிப்பட்ட தீர்ப்பு எந்தவிதத்தில் நியாயமாக இருக்கும். எனவே உச்ச நீதிமன்றம் பாபர் மசூதி வழக்கில் தனது தீர்ப்பை மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்” என்றனர்.

Related Stories: