மனநல மருத்துவமனையில் பெண் கைதி தற்கொலை

பெரம்பூர்: ஈரோடு மாவட்டம், நல்லதொண்டான் பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராஜம்மாள் (65). இவர், கடந்த 2014ம் ஆண்டு ஒரு வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று, வேலூர் மற்றும் துறைப்பாடி சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த 8 மாதங்களுக்கு முன் ராஜம்மாளுக்கு மனநலம் பாதிக்கப்பட்டதாக கூறி, சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு, அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், நேற்று அதிகாலை 5 மணி அளவில், மருத்துவமனை வளாகத்தில் உள்ள ஜன்னலில் ராஜம்மாள் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

Related Stories:

>