ரோந்து பணியில் ஈடுபட்டபோது குப்பை லாரி மோதி ஏட்டு பலி: மாநகராட்சி டிரைவர் கைது

பெரம்பூர்: வியாசர்பாடி எம்கேபி நகர் காவல் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்தவர் பழனிக்குமார் (44). மதுரை மாவட்டத்தை சேர்ந்த இவர், பரங்கிமலை காவலர் குடியிருப்பில் மனைவி விமலா மற்றும் 3 பெண் குழந்தைகளுடன் வசித்து வந்தார்.இவர், நேற்று முன்தினம் இரவு முல்லை நகர் பேருந்து பணிமனை அருகே பைக்கில் ரோந்து சென்றபோது, அவ்வழியே வந்த மாநகராட்சி குப்பை லாரி, ஏட்டு பழனிக்குமார் பைக் மீது மோதியது. இதில், சம்பவ இடத்திலேயே அவர் இறந்தார்.தகவலறிந்து எம்கேபி நகர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, பழனிக்குமார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து கீழ்ப்பாக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்து ஏற்படுத்திய கோடம்பாக்கத்தை சேர்ந்த லாரி டிரைவர் பிரான்சிஸ் (52)  என்பவரை கைது செய்தனர்.இதையடுத்து, பழனிக்குமார் உடலுக்கு சென்னை வடக்கு மண்டல கூடுதல்  கமிஷனர் தினகரன், மேற்கு மண்டல இணை கமிஷனர் விஜயகுமாரி, புளியந்தோப்பு சரக  துணை கமிஷனர் ராஜேஷ்கண்ணா, எம்கேபி நகர் உதவி கமிஷ்னர் அழகேசன் மற்றும்  புளியந்தோப்பு சரகத்தை சேர்ந்த இன்ஸ்பெக்டர்கள் காவலர்கள் என பலரும் அஞ்சலி  செலுத்தினர்.

Related Stories: