×

பைக் திருடிய வாலிபர் கைது

அம்பத்தூர்: அம்பத்தூர் அடுத்த பாடி டிவிஎஸ் நகர், 6வது தெருவை சேர்ந்தவர் அவினாஷ் (22). கல்லூரி மாணவர். இவர், கடந்த 2ம் தேதி இரவு பைக்கில் கொரட்டூர், சீனிவாச நகரில் வசிக்கும் உறவினர் வீட்டுக்கு சென்றார். இரவு அங்கேயே தங்கிவிட்டு மறுநாள் காலை எழுந்து பார்த்தபோது, அவரது பைக் திருடு போனது தெரிந்தது. புகாரின்பேரில் கொரட்டூர் போலீசார், அங்குள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது ஒரு வாலிபர் பைக்கை திருடியது பதிவாகி இருந்தது. விசாரணையில் திருவிக நகர், பாரதியார் 3வது தெருவை சார்ந்த மேகசூரியா (20) என்பது தெரிய வந்தது. அவரை  போலீசார் கைது செய்து, பைக்கை பறிமுதல் செய்தனர்.Tags : Youth arrested, stealing ,bike
× RELATED இளையோர் தினவிழா