பிளாஸ்டிக் பொருட்கள் 1500 கிலோ பறிமுதல்

தாம்பரம்: தாம்பரம் நகராட்சி பகுதியில் 1500 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் ெசய்தனர். சம்பந்தப்பட்ட வியாபாரிகளுக்கு ₹28,500  அபராதம் விதிக்கப்பட்டது. தாம்பரம் மார்க்கெட் பகுதி, முத்துரங்கம் சாலை, சண்முகம் சாலை, மார்க்கெட் பகுதிகளில் உள்ள கடைகளில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா என்பது குறித்து, தாம்பரம் நகராட்சி ஆணையர் (பொறுப்பு) கருப்பைய ராஜா தலைமையில் சுகாதார அலுவலர் மொய்தீன், சுகாதார ஆய்வாளர் சிவக்குமார் மற்றும் நகராட்சி பணியாளர்கள் நேற்று சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, மேற்கண்ட பகுதி கடைகளில் இருந்து  தடைசெய்யப்பட்ட  1500 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர். அவற்றை விற்பனை செய்த கடைக்காரர்களுக்கு ₹28,500 அபராதம் விதித்தனர். பொதுமக்கள் பிளாஸ்டிக்கிற்கு பதிலாக மாற்று பொருட்களை பயன்படுத்த வேண்டும் என்றும் நகராட்சி ஆணையர் பொதுமக்களை கேட்டுக்கொண்டார்.

Related Stories: