×

கோவை அருகே அமைச்சர் பங்கேற்ற அரசு விழாவுக்கு சென்ற திமுக எம்.எல்.ஏ. தடுத்து நிறுத்தம்

கோவை:  கோவை அருகே அமைச்சர்  கலந்துகொண்ட அரசு விழாவில் பங்கேற்க சென்ற தி.மு.க. எம்.எல்.ஏ.வை போலீசார் தடுத்து நிறுத்தினர். கோவை, சிங்காநல்லூர்  தொகுதிக்குட்பட்ட வரதராஜபுரம் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளியில் முதலமைச்சரின் சிறப்பு குறை தீர் கூட்டம் நேற்று நடந்தது. இதில் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றார். அப்போது, சிங்காநல்லூர் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. கார்த்திக் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட தி.மு.க.வினர் கோரிக்கை மனுக்களை கொண்டு வந்தனர். ஆனால் முகாம் நடக்கும் இடத்திற்கு சிறிது தூரத்தில் தி.மு.க.வினரை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

பின்னர், சட்டம்-ஒழுங்கு துணை கமிஷனர் பாலாஜி சரவணன், கார்த்திக்கிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதைதொடர்ந்து திமுகவினர் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.  இதுகுறித்து எம்.எல்.ஏ. கார்த்திக் கூறுகையில், எனது தொகுதியில் நடக்கும் அரசு விழாவிற்கு சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் என்னை அழைத்திருக்க வேண்டும். ஆனால் அவர்கள் அழைக்கவில்லை. கடந்த எட்டு வருடங்களாக சிங்காநல்லூர் தொகுதிக்கு வராத அமைச்சர் வேலுமணி தற்போது உள்ளாட்சி தேர்தல் வருவதால் வருகிறார். இதுவரை நான் மாநகராட்சியிடம் கொடுத்த மனுக்களை முகாமில் அளிக்கலாம் என கொண்டு வந்தேன். ஆனால் போலீசார் தடுத்து நிறுத்தியது ஏமாற்றமளிக்கிறது என்று கூறினார்.

Tags : MLA ,Coimbatore ,DMK ,minister , Coimbatore, Minister, Government Function, DMK MLA
× RELATED கோவையில் மிக பிரமாண்டமான கிரிக்கெட்...