மத்திய அரசிடமிருந்து போதிய ஆதரவில்லை புதுவையை திருநங்கையாக அறிவித்து விடுங்கள்: முதல்வர் நாராயணசாமி ஆவேசம்

புதுச்சேரி: மத்திய அரசு கேரள மாநிலம் திருவனந்தபுரம் குளாத்தி நிதி மற்றும் வரியியல் நிறுவனம், சமூக அறிவியல் நிறுவனத்தின் புதுச்சேரி மண்டல மையம் சார்பில் இந்திய நிதி கூட்டாட்சியிலுள்ள சவால்கள்’ எனும் தலைப்பில் தேசிய கருத்தரங்கம் புதுச்சேரியில் நேற்று நடந்தது. விழாவில் கனிமொழி எம்பி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் பேசினர். கருத்தரங்கை முதல்வர் நாராயணசாமி தொடங்கி வைத்து பேசியதாவது: யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்ட ஜம்மு காஷ்மீர் 15வது நிதிக்குழுவில் சேர்க்கப்பட்டுள்ளது.

ஆனால் புதுச்சேரியும், டெல்லியும் நிதிக்குழுவில் சேர்க்கப்படவில்லை. புதுச்சேரியை நிதிக்குழுவில் சேர்க்க பிரதமர், நிதியமைச்சர், உள்துறை அமைச்சர் என பலரையும் சந்தித்தேன். இதுவரை செயல்படுத்தாமல் புதிதாக பிரித்த மாநிலத்தை மட்டும் சேர்த்துள்ளனர். மத்தியிலுள்ள மாநில மற்றும் யூனியன் பிரதேசம் ஆகிய இரு நிதிக்குழுவிலும் புதுச்சேரி இல்லை.  இதற்கு எங்களை திருநங்கை என அறிவித்து விடுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: