7 உட்பிரிவு ஒன்றிணைத்து அரசாணை தமிழக அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும்: பிரதமரிடம் ஜான்பாண்டியன் மனு

சென்னை: ஏழு உட்பிரிவுகளை ஒன்றிணைத்து அரசாணை வழங்க தமிழக அரசுக்கு மத்திய அரசு பரிந்துரை செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடியை தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான்பாண்டியன் நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்துள்ளார். தமிழக மக்கள் முன்னேற்றக் கழக நிறுவனர் - தலைவர் ஜான்பாண்டியன்,மாநில பொதுச் செயலாளர் வழக்கறிஞர் பிரிசில்லா பாண்டியன் நேற்று ெடல்லியில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் மோடியை  சந்தித்து கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது: தேவேந்திரகுல வேளாளர் சமூக மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான குடும்பன், காலாடி, பண்ணாடி, கடையன்,  பள்ளன், தேவேந்திர குலத்தான், வாதிரியான்  என்ற ஏழு உட்பிரிவுகளை ஒன்றாக ஒன்றிணைத்து தேவேந்திரகுல வேளாளர் என்ற அரசு ஆணை வழங்க தமிழக அரசுக்கு மத்திய அரசு சார்பில் பரிந்துரை செய்யும் படியும் தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தை சமூக மக்களின் விருப்பப்படி பட்டியல் சாதியில் இருந்து வெளியேற்றி தமிழகத்தில் “வேளாண் மரபினர்” என்ற பிரிவின் கீழும் மத்தியில் பட்டியல் சாதி அல்லாத பிரிவில் சேர்க்கும் படியும்,  அவ்வாறு மாற்றியமைத்து  அவர்களுக்கான இட ஒதுக்கீட்டை மாற்றியமைக்க வேண்டும். இவ்வாறு கோரிக்கை மனுவில் கூறியிருந்தது.

பின்னர் பெ.ஜான்பாண்டியன் கூறியதாவது: பிரதமர் தங்களது கோரிக்கையை முழுமையாக கேட்டதோடு தேவேந்திரகுல வேளாளர்  மக்களின் கோரிக்கை குறித்து தான் முழுமையாக அக்கறையோடு இருப்பதாகவும்,  ஆதரவு நிலைப்பாட்டில் இருப்பதாகவும் நிச்சயமாக மத்திய அரசு தேவேந்திரகுல வேளாளர் மக்களின் கோரிக்கையை நிறைவேறுவதற்கு உறுதுணையாக இருக்கும் என்றும் உறுதி அளித்துள்ளார். இவ்வாறு கூறினார்.

Related Stories:

>