மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் தொடர், டி-20 போட்டிக்கான இந்திய அணியை அறிவித்தது பிசிசிஐ

கொல்கத்தா: மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் தொடர் மற்றும் டி-20 தொடருக்கான இந்திய அணி வீரர்களின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. வரும் டிசம்பர் 6 ஆம் தேதி முதல் இருபது ஓவர் கிரிக்கெட் போட்டி துவங்குகிறது. வெஸ்ட் இண்டீஸ் தொடரில் பங்கேற்கும் இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் டி-20 தொடருக்கு வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி, 2 ஆண்டுகளுக்கு பின் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர், கடைசியாக 2017ல் கிங்ஸ்டனில் நடந்த விண்டீசுக்கு எதிரான போட்டியில் பங்கேற்றார்.

ரோஹித் சர்மாவுக்கு ஓய்வு அளிக்கப்படும் என்று எதிர்பார்த்த நிலையில் அவர் இரு அணிகளிலும் இடம்பெற்றுள்ளார். மொகமட் ஷமி, புவனேஷ்வர் குமார், ரிஸ்ட் ஸ்பின்னர் குல்தீப் யாதவ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். ஒரு நாள் அணியில் புதுமுக வீரர் ஷிவம் துபே சேர்க்கப்பட்டுள்ளார். டி-20 அணியில் கேதவ் ஜாதவ் நீக்கப்பட்டு தமிழக ஆல்-ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். டி20 ஹாட்ரிக் எடுத்த தீபக் சாஹர் மீண்டும் ஒருநாள் அணிக்குத் திரும்பியுள்ளார், இவர் கடைசியாக ஒரேயொரு ஒருநாள் போட்டியில் ஆப்கானுக்கு எதிராக 2018-ல் ஆடியது குறிப்பிடத்தக்கது.

ஒருநாள் போட்டியில் பங்கேற்கும் இந்திய வீரர்கள்; விராட் கோலி(கேப்டன்), ரோகித் சர்மா (துணை கேப்டன்), ஷிகர் தவான், கே.எல்.ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், மணிஷ் பாண்டே, ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), ஷிவம் துபே, கேதர் ஜாதவ், ரவிந்திர ஜடேஜா, யுவேந்திர சாஹல், குல்தீப் யாதவ், தீபக் சாஹர், முகமது சமி, புவணேஷ்வர் குமார் ஆகியோர் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரருக்கான இந்திய அணியில் இடம்பெற்றுள்ளனர்.

டி-20 தொடரில் பங்கேற்கும் இந்திய வீரர்கள்; விராட் கோலி(கேப்டன்), ரோஹித் சர்மா(துணைக் கேப்டன்), ஷிகர் தவான், கே.எல்.ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், மணிஷ் பாண்டே, ரிஷப் பந்த்(விக்கெட் கீப்பர்), ஷிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், ரவிந்திர ஜடேஜா, யுவேந்திர சாஹல், குல்தீப் யாதவ், தீபக் சாஹர், முகமது சமி, புவணேஷ்வர் குமார்ஆகியோர் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டி-20 தொடரருக்கான இந்திய அணியில் இடம்பெற்றுள்ளனர்.

Related Stories: