×

தொம்பரம்பேடு கிராமத்தில் உள்ள ஸ்ரீமகா கால பைரவர் கோயிலில் ஜெயந்தி விழா

ஊத்துக்கோட்டை: திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே தொம்பரம்பேடு கிராமத்தில் உள்ள ஸ்ரீமகா கால பைரவர் கோயிலில் பைரவர் ஜெயந்தி விழா  நேற்று முன்தினம்  மாலை காப்பு கட்டி கலச ஸ்பான நிகழ்ச்சியுடன் தொடங்கியது. நேற்று  காலை 6 மணிக்கு கணபதி ஹோமம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது. இதன்பின்னர் 64 கலச பைரவ ஆராதனை, 64 பைரவ ஹோமம் பூர்ணாஹுதி நடைபெற்றது. 7 மணிக்கு பெருமாள் கோயிலில் இருந்து ஆபரணப்பெட்டியில் வெள்ளி கவசம் எடுத்துக்கொண்டு திருக்குடை ஏந்தி, பெண்கள் தலையில்  பால்குடம் ஏந்தியும் ஊர்வலமாக சென்று பைரவருக்கு பாலாபிஷேகம் செய்தனர்.

8 மணிக்கு 64 கலச புறப்பாடு, கலச அபிஷேகம் மற்றும் பைரவருக்கு வெள்ளிக்கவசம் சாற்றி சிறப்பு தீபாராதனை நடந்தது. 11 மணிக்கு உற்சவருக்கு திருக்குடை  சாற்றி  ஊஞ்சல் சேவை நடைபெற்றது. பிற்பகல் 3 மணிக்கு பைரவ பீஜாசரவ ஹோமம், நவ பைரவ கலச புறப்பாடு அஷ்டபைரவர், ஆதி பைரவருக்கு பால், தயிர், பன்னீர் சந்தனம் மற்றும்  சிறப்பு திரவிய அபிஷேகம் நடத்தினர். ஜெயந்தி விழாவில் தொம்பரம்பேடு, ஊத்துக்கோட்டை, தாராட்சி, பெரியபாளையம், திருவள்ளூர், கும்மிடிபூண்டி, செங்குன்றம் மற்றும் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான  பக்தர்கள் கலந்துகொண்டனர்.

இதற்கான ஏற்பாடுகளை கோயில் தர்மகர்த்தா டி.ஆர்.பழனி மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர். நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவருக்கும் அன்னதானமும், பிரசாதமும் வழங்கப்பட்டது. இவ்விழாவில் மகளிர் குழுக்களின் கோலாட்டம், கும்மியாட்டம் மற்றும் சிறுவர்களின் சிறப்பு நடன நிகழ்ச்சியும், வாணவேடிக்கைகளும் நடைபெற்றது.

Tags : Jayanthi Ceremony ,Srimaga Kal Bhairav Temple ,Thombarampadu Village , Thombarambadu, Srimaka Kali Bhairavar, Jayanti Festival
× RELATED மகாவீரர் ஜெயந்தி 500 பேருக்கு அன்னதானம்