சந்திராயன் 2 விண்கலத்தின் விக்ரம் லேண்டர், இலக்கு நிர்ணயிக்கப்பட்ட பகுதியிலிருந்து 500 மீட்டருக்குள் கடினமாக தரையிறங்கியதாக மத்திய அரசு விளக்கம்

டெல்லி :திட்டமிடப்பட்டதைவிட வேகம் குறைந்ததால் சந்திராயன் 2 விண்கலத்தின் விக்ரம் லேண்டர், இலக்கு நிர்ணயிக்கப்பட்ட பகுதியிலிருந்து 500 மீட்டருக்குள் கடினமாக தரையிறங்கியதாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

தென்துருவத்தில் ஆய்வு மேற்கொள்ள அனுப்பப்பட்ட சந்திராயன் 2 விண்கலம்

 நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கி ஆய்வு மேற்கொள்ள ஆர்பிட்டர், லேண்டர், ரோவர் ஆகிய 3 அமைப்புகளுடன் சந்திரயான் 2 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது. கடந்த செப்.5ம் தேதி லேண்டர் வாகனம் நிலவின் தென்துருவத்தில் தரையிறங்குதல் நிகழ்வு நடந்தது. அப்போது தரையிறங்க வேண்டிய இடத்துக்கு 500 மீட்டர் உயரத்தில் இருந்து இஸ்ரோவுடனான லேண்டரின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதையடுத்து நிலவை சுற்றி வந்து கொண்டிருந்த ஆர்பிட்டர், லேண்டர் இருக்கும் இடத்தை புகைப்படம் எடுத்து அனுப்பியது. அதில் மென்மையான முறையில் தரையிறங்க புரோகிராம் செய்யப்பட்ட நிலையில் கடினமான முறையில் சாய்வாக தரையிறங்கியது தெரியவந்தது.

திட்டமிடப்பட்டதைவிட வேகம் குறைந்ததால் லேண்டர் கடினமாக தரையிறங்கியது

இந்த நிலையில் மக்களவையில் விண்வெளித்துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங்கிடம் விக்ரம் லேண்டர் தரையிறங்குவது தொடர்பாக கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் எழுத்துப்பூர்வமாக  பதிலளித்தார். அதில்,முதல் கட்டமாக நிலவின் மேற்பரப்பில் 30 கிமீ உயரத்திலிருந்து 7.4 கிமீ தரையிறங்கியது. பின்னர் அதன் வேகம் வினாடிக்கு 1,683 மீட்டரிலிருந்து 146 மீட்டராக குறைக்கப்பட்டது. இரண்டாம் கட்டமாக நடந்த தரையிறங்குதலின் போது வடிவமைக்கப்பட்ட மதிப்புக்கு அதிகமாக வேகம் குறைக்கப்பட்டது. இதன் விளைவாக விக்ரம் லேண்டர் கடினமான தரையிறங்குதல் முறையில் 500 மீட்டர் உயரத்திலிருந்து தரையிறங்கியது என்று விளக்கம் அளித்தார்.

Related Stories: