உலகக்கோப்பை துப்பாக்கிச்சுடுதலில் மேலும் ஒரு தங்கம் வென்றுள்ள இந்தியா..: புள்ளிப் பட்டியிலில் முதிடத்துக்கு முன்னேற்றம்!

புடியான்: உலகக்கோப்பை துப்பாக்கிச்சுடுதலில் மேலும் ஒரு தங்கம் வென்றுள்ள இந்தியா, புள்ளிப் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது. சீனாவில் 2019 ஐஎஸ்.எஸ்.எஃப் உலகக்கோபபை துப்பாக்கி சுடுதல் போட்டி நடந்து வருகிறது. கடந்த 17ம் தேதி தொடங்கிய இப்போட்டிகள் வரும் 23ம் தேதி வரை நடைபெறுகிறது. புடியான் நகரில் நடைபெற்று வரும் இறுதிச்சுற்று போட்டிகளில் இன்று அதிகாலை நடந்த மகளிருக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீராங்கனை மனு பக்கர்(17) பங்கேற்றார். இதில் சுற்றுகளில் குறி தவறாமல் சுட்டு, 244.7 புள்ளிகளை அள்ளிய அவர், இறுதியில் தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். இதன்மூலம் அவர் ஜூனியர் பிரிவில் புதிய உலக சாதனையையும் படைத்துள்ளார். இதையடுத்து, தமிழகத்தின் கடலூர் மாவட்டத்தை பூர்வீகமாக கொண்ட இளவேனில் வாலறிவன் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் 250.8 புள்ளிகள் எடுத்து இந்த தங்கப்பதக்கத்தை வென்றார்.

இதனிடையே 10.மீ ஏர்பிஸ்டல் பிரிவில் 250.7 புள்ளிகள் பெற்று சீன வீராங்கனை லின் யிங்-ஷின் வெள்ளிப்பதக்கமும், 229 புள்ளிகள் பெற்று ருமேனியாவின் லாரா-ஜார்ஜெட்டா கோமன் வெண்கலப் பதக்கமும் வென்றனர். இந்த நிலையில், ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம் கிடைத்துள்ளது. இப்போட்டியில் இந்திய வீரர் பன்வார் திவ்யன்ஷ் சிங்(வயது 17), 250.1 புள்ளிகளுடன் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். இதன்மூலம் மொத்தம் 3 தங்கப்பதக்கங்களுடன் இந்தியா, பதக்க பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது. இவர் பெய்ஜிங்கில் நடந்த உலகக்கோப்பையில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்றிருந்தார். இதன்மூலம், ஒலிம்பிக்கில் பங்குபெற திவ்யன்ஷ் தகுதி பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில், 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இறுதிச்சுற்றுக்கு முன்னேறிய அபிஷேக் வர்மா மற்றும், சவுரப் செளதரி வெற்றி பெறாத நிலையில், முறையே 5 மற்றும் 6வது இடங்களை பிடித்துள்ளனர்.

Related Stories: