2021ம் ஆண்டும் அதிமுக ஆட்சி அமையும் என்பதையே அதிசயம் நிகழும் என்று ரஜினி கூறியிருக்கலாம் : முதல்வர் பழனிசாமி பேட்டி

சென்னை : 2021ம் ஆண்டும் அதிமுக ஆட்சி அமையும் என்பதையே அதிசயம் நிகழும் என்று ரஜினி கூறியிருக்கலாம் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இதனை தெரிவித்துள்ளார். முன்னதாக கோவாவில் இருந்து திரும்பிய நடிகர் ரஜினிகாந்த், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், 2021ம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் 100க்கு 100% தமிழக மக்கள் அதிசயத்தை, அற்புதத்தை நிகழ்த்தப் போகிறார்கள் என்று கருத்து தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்தின் கருத்துக்கு பதில் கூறிய முதல்வர் பழனிசாமி, எந்த அடிப்படையில் 2021ஆம் ஆண்டில் அதிசயம் நிகழும் என ரஜினி கூறுகிறார் என்று தெரியவில்லை.ரஜினி கட்சி தொடங்கிய பிறகே அவரை பற்றியும், அவரது கருத்தை பற்றியும் விரிவாக கூற முடியும். 2021ம் ஆண்டில் அதிமுக அரசு மலரும் என்பதையே அதிசயம் நிகழும் என்று ரஜினி கூறியிருக்கலாம். 2021ம் ஆண்டில் அதிமுவை சேர்ந்த ஒருவரே முதல்வர் வேட்பாளராக இருப்பார் என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய முதல்வர் பழனிசாமி, அந்தந்த கால கட்டத்தில் உள்ள அரசியல் சூழலுக்கு ஏற்ப உள்ளாட்சி பதவிகளுக்கு மறைமுக தேர்தல் பற்றி முடிவு எடுக்கப்பட்டது. நாடாளுமன்ற தேர்தலில் இருந்த கூட்டணியே உள்ளாட்சித் தேர்தலிலும் தொடர்கிறது; உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவிற்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.கணக்கெடுப்பு பணிகள் முடிந்தபிறகு வறுமைகோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு ரூ.2000 வழங்கப்படும்.33 ஆண்டுகளாக மக்கள் வைத்த கோரிக்கையை ஏற்று தென்காசியை தனி மாவட்டமாக்கியுள்ளோம்.தவறுதலாக சர்க்கரை ரேசன் கார்டுகள் பெற்றவர்கள் அரிசி ரேசன் கார்டுகள் பெற தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது, என்றார்.

Related Stories: